சென்னை வெள்ளத்தில் தத்தளிப்பதற்கு உண்மையான காரணம் இதோ!

0
113

சென்னை நீரில் தத்தளிக்க காரணமாக இருப்பது ஆக்கிரமிப்புகளும், சட்டவிரோத கட்டுமானங்களும் தான் என தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்திருக்கிறார்.

அவருடைய அறிக்கை ஒன்றில் தெரிவித்திருப்பதாவது, கிணற்றை காரணம் என்ற சமயத்தில் சிரித்தோம், ஆனால் இன்று பல ஆயிரம் கிலோமீட்டர் மழைநீர்வடிகால்வாய்களையே காணோம், நாட்டின் மிகப்பெரிய பகல் கொள்ளை மனசாட்சி இருக்கக்கூடிய சென்னை மாநகராட்சி அதிகாரிகள் யாராவது இருந்தால் மழை நீர் வடிகால் குழாய்கள் மாயமானதன் மர்மத்தை வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்து இருக்கிறார். இந்த குற்றத்திற்கு காரணமான அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு அதிகபட்ச தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும், அவர்களுடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும், அவன் செய்கிறானே நான் செய்தால் என்ன? என்ற தத்துவமே ஆக்கிரமிப்புகளுக்கு காரணமாக இருக்கிறது. சட்டவிரோத கட்டுமானங்களுக்கும் இதுவே முதல் காரணமாக இருக்கிறது, என தெரிவித்திருக்கிறார்.

தமிழக மாவட்ட நகராட்சிகள் கட்டிட விதிகள் 1972 இன் படி நீர்நிலைகளில் இருந்து 15 மீட்டருக்குள் கட்டிடங்கள் கட்ட அனுமதி கிடையாது என்ற விதி கடந்த 2008ஆம் ஆண்டு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும விதிகளில் இருந்து நீக்கப்பட்டது. இதன் காரணமாக தான் நீர்நிலைகளின் அருகே கட்டடங்கள் கட்டப்பட்டு நீர்நிலைகள் சுருக்கப்பட்டு மழைநீர் தடுக்கப்பட்டது. கடலில் கலக்க முடியாமல் நீர் புறநகர் பகுதியில் தேங்கி இருப்பதற்கு இதுவே காரணம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

கடந்த 2008ஆம் வருடம் தமிழ்நாட்டில் யாருடைய ஆட்சி நடைபெற்றது? என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Previous articleஉங்களுடைய சேவைக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி! நெகிழ்ந்து பாராட்டிய முதலமைச்சர்!
Next articleநாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!