நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
60

அந்தமான் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு அநேக பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையை கடந்து இருக்கின்றது. இதனால் சென்னை செங்கல்பட்டு உட்பட ஒரு சில பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்தது அதன் அடுத்த பகுதியாக அந்தமான் பகுதியில் நாளைய தினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது. அதன்படி இன்றைய தினம் கோயம்புத்தூர், நீலகிரி, கன்னியாகுமரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

நாளையதினம் கோயம்புத்தூர், நீலகிரி, நெல்லை, குமரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், நாளை மறுதினம் நெல்லை, குமரி, உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக பகுதிகளில் மிதமான மழையும், வரும் திங்கள்கிழமை உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்ற மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியில் அனேக பகுதிகளில் மிதமான மழையும் பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று 8:30 யுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் தாம்பரம் பகுதியில் 23 சென்டிமீட்டர் மழையும், சோழவரம் பகுதியில் 22 சென்டி மீட்டர் மழையும், எண்ணூர் பகுதியில் 21 சென்டி மீட்டர் மழையும் மற்றும் கும்மிடிப்பூண்டி, செங்குன்றம், அடுத்த பகுதியில் 18 சென்டி மீட்டர் மழையும், மாமல்லபுரத்தில் 15 சென்டி மீட்டரும், சென்னை நுங்கம்பாக்கம், டிஜிபி அலுவலகம், பெரம்பூர், உள்ளிட்ட பகுதியில் 16 சென்டி மீட்டர் மழையும், தாமரைப்பாக்கம், அம்பத்தூர், எம்ஜிஆர் நகர், எம்ஆர்சி நகர், உள்ளிட்ட பகுதிகளில் தலா 15 சென்டி மீட்டர் மழையும், சென்னை விமான நிலையம், தரமணி, அண்ணா பல்கலைக்கழகம், அயனாவரம், ஏசிஎஸ் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் தலா 15 சென்டி மீட்டர் மழையும், செம்பரம்பாக்கம், வில்லிவாக்கம், தாம்பரம், இந்திய விமானப்படை தளம், உள்ளிட்ட பகுதிகளில் தலா 13 சென்டிமீட்டர் மழையும், சத்யபாமா பல்கலைக்கழகம், கேளம்பாக்கம், திருப்போரூர், தண்டையார்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் தலா 12 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அதேபோல பூந்தமல்லி, திருக்கழுக்குன்றம், காட்டு குப்பம், மேற்கு தாம்பரம், உள்ளிட்ட பகுதிகளில் தலா 11 சென்டிமீட்டர் மழை பெய்திருக்கிறது. செங்கல்பட்டு, இந்துஸ்தான் பல்கலைக்கழகம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், செய்யூர், மரக்காணம், ஊத்துக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் தலா 10 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது.