குழந்தைகளே இதோ இது உங்களுக்கா! முதல்வர் தொடங்கி வைக்கவுள்ள புதிய திட்டம்!

Photo of author

By Parthipan K

குழந்தைகளே இதோ இது உங்களுக்கா! முதல்வர் தொடங்கி வைக்கவுள்ள புதிய திட்டம்!

Parthipan K

Updated on:

Here it is for you kids! A new project to be launched by the Chief Minister!

குழந்தைகளே இதோ இது உங்களுக்கா! முதல்வர் தொடங்கி வைக்கவுள்ள புதிய திட்டம்!

தமிழகத்தில் மாநில அரசின் நிதிகளை கொண்டு காலை  உணவு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 1,545 தொடக்கப் பள்ளிகளை சேர்ந்த ஒரு லட்சத்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.

இந்த திட்டத்திற்கு ரூ 33.56 கோடி முன்னதாகவ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காலை சிற்றுண்டி திட்டத்தில்  அரிசி உப்புமா ,ரவா உப்புமா ,சேமியா உப்புமா ,கோதுமை ரவா உப்புமா ,ரவா கிச்சடி, சேமிய கிச்சடி,சோள காய்கறி கிச்சடி,கோதுமை ரவா கிச்சடி,வேன் பொங்கல் ,ரவா பொங்கல்  போன்ற உணவு வகைகள் திங்ககிழமை முதல் வெள்ளிகிழமை வரை மாறி மாறி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்தில் இரண்டு நாட்கள் உள்ளூர் சிறுதானியங்கள் கொண்டு காலை சிற்றுண்டி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த காலை உணவு திட்டத்தை வரும் 15  ஆம் தேதி காலை எட்டு மணிக்கு மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.