சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல்! இரண்டு பெண்கள் கைது! 

0
187
Heroin
Heroin

சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல்! இரண்டு பெண்கள் கைது!

போதைப் பொருள் கடத்திவரப்படுவதாக கிடைத்த உளவுத் தகவலையடுத்து, ஜோகனஸ் பர்க்கிலிருந்து தோகா வழியாக சென்னை வந்த கத்தார் ஏர்வேஸ் விமான பயணிகளை, சுங்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அந்த விமானத்தில் வந்த 2 ஆப்பிரிக்க பெண்களின் நடவடிக்கை சந்தேகிக்கும் வகையில் இருந்தது. ஒருவர் வீல் சேரில் அமர்ந்தும், மற்றொருவர் ஆரோக்கியமாகவும் இருந்தார். வீல்சேரில் அமர்ந்திருந்தவரின் உடல் நிலை குறித்து சுங்க அதிகாரிகள் விசாரித்தனர். அவர் பதற்றம் அடைந்து முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

அவர்கள் கொண்டு வந்த பைகளை பரிசோதித்த போது, அதில் 8 பிளாஸ்டிக் பைகள்  மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மசாலா பொடிகள் தூவப்பட்டிருந்தன. பரிசோதனையில் அவை வெள்ளை நிற ஹெராயின்  பவுடர் என உறுதி செய்யப்பட்டது. 9.87 கிலோ எடையில் இருந்த இந்த ஹெராயின் போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.70 கோடி. இவைகள் போதைப் பொருள் மற்றும் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன.

இவற்றை கடத்திவந்த இரு பெண்களிடம் நடத்திய விசாரணையில், ஒருவர் ஜிம்பாப்வே நாட்டிலிருந்து தில்லியில் உள்ள ஒரு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தார் என்றும், அவருக்கு உதவியாக தென் ஆப்பிரிக்காவின்   கேப்டவுன் நகரில் வசிக்கும் மற்றொரு பெண்ணும் வந்தது தெரியவந்தது.

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் சென்னையில் இறங்கினர். இருவரும் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.  இது தொடர்பாக மேலும் விசாரணைகள் நடைப்பெறுவதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.

Previous articleதமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? தளர்வு அறிவிக்கப்படுமா? இன்று முக்கிய முடிவு!
Next article12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா? அமைச்சர் விளக்கம்!