12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா? அமைச்சர் விளக்கம்!

0
89
anbil mahesh
anbil mahesh

12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா? அமைச்சர் விளக்கம்!

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், மதிப்பெண்களை எப்படி வழங்குவது என்பது குறித்து இரண்டு வாரங்களில் தெரிவிக்கப்படும் என சிபிஎஸ்இ கூறியுள்ளது.

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட பிறகு, உத்தரப்பிரதேசம், கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளன. இதைத் தொடர்ந்து தமிழகத்திலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் எழுந்துள்ளது.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து, பத்திரிக்கையாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது, தேர்வுகள் நடத்தப்படுவதில் பல்வேறு கருத்துக்கள் பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே இருப்பதை, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறினார்.

இதனால், இன்று மருத்துவ வல்லுநர்களுடனும், அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்தப்படும் என்றும், அதன் பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் உரிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அன்பில் மகேஷ் தெரிவித்தார். மற்ற மாநிலங்களில் உடனடியாக 12ம் வகுப்பு பொத்தேர்வை ரத்து செய்துள்ள நிலையில், தமிழகத்தில் அறிவிப்பு வெளியிட தாமதமாவதால் மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.