தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? தளர்வு அறிவிக்கப்படுமா? இன்று முக்கிய முடிவு!

0
76
cm stalin
cm stalin

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? தளர்வு அறிவிக்கப்படுமா? என்பது குறித்து இன்று முக்கிய முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையை தடுக்க தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்த முழு ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ளதால், ஊரடங்கு நீட்டிக்கப்படுமோ? என்ற அச்சம் பலரிடம் உள்ளது. அதே நேரத்தில், கொரோனா தொற்று குறைந்து வந்தாலும், நேற்று 22 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், முழு ஊரடங்கு நீட்டிக்கவே வாய்ப்புகள் உள்ளன.

அதே நேரத்தில், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட நேரத்திற்கு தளர்வுகளை அறிவித்து ஊரடங்கை நீட்டிக்கலாம் என சிலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில், நேற்று தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, தலைமை காவல்துறை இயக்குநர் திரிபாதி, பல்துறை செயலாளர்கள் உள்ளிட்டோருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது ஊரடங்கை ஒருவாரத்திற்கு நீட்டிக்கலாம் என்றும், கொரோனா வைரஸ் தொற்று குறைந்த மாவட்டங்களில் தளர்வுகளை அறிவிக்கலாம் என்றும் வல்லுநர்கள் பரிந்துரைத்தது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து இன்று மதியம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு முழு ஊரடங்கு அறிவிப்பை சனிக்கிழமை மதியம் தான் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மதியம் திடீரென அறிவித்ததால், காலை 10 மூடப்பட்ட கடைகள் அனைத்தும் மீண்டும் அவசர அவசரமாக அனைவரும் திறந்து விற்பனையில் ஈடுபட்டனர். பொதுமக்களும் ஒரே நாள் தான் உள்ளது என சந்தைகளில் கூட்டம் கூட்டமாக கூடினர்.

தளர்வுகள் அனைத்தும் அடுத்த ஒன்றரை நாட்கள் நீக்கப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் அனைவரும் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். அதே போன்று, இன்றும் சனிக்கிழமை என்பதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என வணிகர்கள் சிலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.