உயர் நீதிமன்றத்தில் தீக்குளித்தவர் பழங்குடிஇனத்தவர் அல்ல:! தமிழக அரசு திட்டவட்டம்!
காஞ்சிபுரத்த சேர்ந்த சேர்ந்த வேல்முருகன் என்பவர் ஜாதி சான்றிதழ் தராமல் அலைக்கழித்ததாக கூறி கடந்த அக்டோபர் 11ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து உயிரிழந்தார்.
இந்த வழக்கினை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டுமென்று நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியன் பரிந்துரைத்தார்.அதன்படி இந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் தலைமையில் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையில் தமிழக அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் என்பவர் ஆஜராகி இந்த வழக்கை குறித்து வாதாடினார்.அதில் வழக்கறிஞர் வேல்முருகன் அலைக்கழிக்கப்படவில்லை, என்றும்,பட்டியல் இனத்தைச் சேர்ந்த இவர் பழங்குடியினர் சான்று கூறி விண்ணப்பித்ததால் மட்டுமே விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்றும், அதுவும் விண்ணப்பித்த ஆறு நாட்களில் விண்ணப்பம்
பரிசீலிக்கப்பட்டு, உடனடியாக அவருக்கும் தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
மேலும் இறந்தவர் கூறியது போல் இதில் அலைகழிப்பு எதுவும் இல்லை என்றும் அரசு வழக்கறிஞர் சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அதிகாரியை நியமித்து,இரண்டு வாரங்களில் இது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.