நடிகர் விஜய்யின் சொகுசு கார் வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

Photo of author

By Parthipan K

நடிகர் விஜய்யின் சொகுசு கார் வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் விஜய் கடந்த 2005-ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து  சொகுசுகாரை இறக்குமதி செய்தார். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரியாக ரூ.7.98 லட்சம் செலுத்த வேண்டும் என வணிகவரித்துறை தெரிவித்தது. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் வரியை செலுத்தாத காரணத்தினால், விஜய்க்கு காரின் நுழைவு வரி மற்றும் அபராதத்தொகை இரண்டும் சேர்த்து செலுத்த வேண்டும் என வணிகவரித்துறை உத்தரவிட்டது.

ஆனால், நுழைவுவரி தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால், வரி செலுத்த காலதாமானது என்றும் எனவே அபராதத் தொகையை ரத்து செய்ய வேண்டும் என்று, விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் அபராதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கினை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார். மேலும் அபராதம் தொடர்பான நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்ததுடன் இந்த வழக்கின் மீதான விசாரணை முடியும் வரை அபராதத் தொகையை வசூலிப்பது தொடர்பான எந்தவித கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இதற்குமுன்பு இதேபோல் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரிவிலக்கு கேட்டு நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விஜய்யின் கோரிக்கையை ஏற்க மறுத்து ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததுடன் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.