வருமானம் வழக்கில்  சிக்கிய ஆஸ்கார்  நாயகனுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

0
173

இங்கிலாந்தை சேர்ந்த லிப்ரா மொபைல் நிறுவனத்திற்கு இசை ரிங் டோன் இசை அமைப்பதற்காக ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான்  உடன் இந்நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் ஏ.ஆ.ர் ரகுமானுக்கு 3 கோடியே 47 லட்சம் ரூபாயை அந்நிறுவனம் நேரடியாக கொடுத்துள்ளது.

இந்த பல பரிவர்த்தனையின் போது ஏ.ஆர். ரகுமான் வருமான வரி செலுத்த தவறிவிட்டதாக  வருமான வரித்துறை சார்பில் ஏ.ஆர்.ரகுமானின் மீது நடவடிக்கை எடுத்தது.

அதன்பின் ஏ.ஆர். ரகுமான் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை ஏற்றுக் கொண்ட முதன்மை ஆணையர் அந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.

அதன்பின் தற்போது மீண்டும் வருமானவரித்துறை மேல்முறையீட்டு  தீர்ப்பாயத்தை உறுதி செய்து கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் வருமான வரித் துறையின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவிற்கு பதிலளிக்கும்படி  ஏ.ஆர். ரகுமானுக்கு சென்னை உயர்நீதி மன்றம் சார்பில்  நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 

Previous articleகல்லூரி மாணவியோடு கணவன் ஓடியதால் மனைவி எடுத்த விபரீத முடிவு !! 
Next articleஜி20 உச்சிமாநாடு இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும்