அரியர் தேர்வு ரத்து குறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Photo of author

By Parthipan K

இறுதி செமஸ்டர் தேர்வுகளை மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நடத்தும்போது, அரிய தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஏன் ஆன்லைன் மூலம் நடத்தக்கூடாது என்ற கேள்வியை உயர்நீதிமன்றம் முன்வைத்துள்ளது. இந்த கேள்விக்கு தமிழக அரசு பதிலளிக்கும்படி  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, அரியர் தேர்வு ரத்து என்பது குறித்த பதில் மனுவை தாக்கல் செய்யாத பல்கலைக்கழகத்தின் மானியக் குழுவிற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அரியர் தேர்வு ரத்து என்ற தமிழக அரசு எடுத்துள்ள இத்தகைய முடிவில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று யுஜிசி பகிரங்கமாக தெரிவித்துள்ளது. அதனால் உயர்நீதிமன்றம் இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளது.

அதாவது தமிழக உயர்கல்வித் துறையும், யுஜிசியும்  பதில் மனுவை தாக்கல் செய்த பிறகே உயர் நீதிமன்றம் பரிசீலனை செய்யும் என்றும் பதில் மனு தாக்கல் செய்வதற்கு நவம்பர் 20ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்தும் தீர்ப்பளித்துள்ளது.