மீண்டும் உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை!

Photo of author

By Sakthi

மீண்டும் உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை!

இந்த மாதத்திற்கான வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் வணிக பயன்பாட்டுக்கு கேஸ் சிலிண்டரை பயன்படுத்துபவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயரும் பொழுதும் குறையும் பொழுது எண்ணெய் நிறுவனங்கள் மிதந்தோறும் பெட்ரோல் விலை, டீசல் விலை, கேஸ் சிலிண்டர் விலை ஆகியவற்றை கூட்டி குறைக்கும். இதையடுத்து கடந்த நவம்பர் மாதத்திற்கான வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலையை அதிகரித்தது போலவே இந்த மாதம் அதாவது டிசம்பர் மாதத்திற்கான வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலையை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் டிசம்பர் 1ம் தேதியான இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பெட்ரோல் விலையிலும் டீசல் விலையிலும் எந்தவொரு மாற்றமும் இல்லை. அதே போல வீட்டுக்கு பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் விலையிலும் மாற்றம் இல்லாமல் 918 ரூபாய்க்கு விற்பனை ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் விலையை மட்டும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. அதன்படி இந்த மாதம் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டரின் விலை 26.50 ரூபாய் அதிகரித்துள்ளது. இதையடுத்து கடந்த மாதம் 1942 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கேஸ் சிலிண்டர் 26.50.ரூபாய் அதிகரித்ததால் 1968.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

சென்னையில் மட்டும் தான் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் இந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மாற்றாக டெல்லி, கொல்கத்தா, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் சிலிண்டரின் விலையில் சற்று மாற்றம் காணப்படுகின்றது.

சென்னையில் கடந்த நவம்பர் மாதம் 1ம் தேதி 101.50 ரூபாய் அதிகரிக்கப்பட்டு வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் 1999.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் நவம்பர் மாதம் 16ம் தேதி 57 ரூபாய் குறைக்கப்பட்டு கடந்த நவம்பர் 30ம் தேதி வரை 1942 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.