மாணவர்களின் உயிருடன் விளையாடும் அரசு உயர் அதிகாரிகள்! சேதமடைந்த கட்டிடத்தில் மாணவர்களுக்கு வகுப்பு!
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தற்பொழுது வரை மக்களின் கண்துடைப்புக்காக மட்டுமே சில செயல்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டு தொடரில் பள்ளி கல்வித்துறைக்கு 36,895 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதாக கூறினர். பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை வசதியை மேம்படுத்த ரூ 7000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறினர். அது மட்டுமின்றி இந்த ஒதுக்கீடு செய்ததிலிருந்து 18,000 வகுப்புகள் கட்டப்படுவதாகவும் தெரிவித்தனர்.
ஆனால் தற்பொழுது வரை பல இடங்களில் அரசு பள்ளி கட்டடங்கள் பராமரிப்பற்று சேதமடைந்து காணப்படுகிறது. அந்த வகையில், திருவள்ளுவர் மாவட்டத்தில் ஆர்.கே பேட்டை பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பொழுது அங்குள்ள வகுப்புகள் பராமரிப்பற்று சேதமடைந்து இருப்பதால் ,புதிய வகுப்புகள் அமைத்து தருமாறு பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி அங்குள்ள வகுப்புகள் போதாத காரணத்தினால் கூடுதல் வகுப்பறைகளை கட்டித் தரும் படியும் கேட்டுள்ளனர்.
பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த உயர் அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.அதனால் இதனை சிறிதும் கண்டுகொள்ளாத விடியா அரசை எதிர்த்து பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்த தொடங்கிவிட்டனர். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு பள்ளியின் மரத்தடியிலேயே உட்கார்ந்து போராட்டம் நடத்த தொடங்கினர்.
குழந்தைகளின் பெற்றோர்களும் பலுமுறை இதுகுறித்து கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது. சம்பவ இடத்திற்கு வந்த பி.டி.ஓ ,மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் வகுப்புக்கு அனுப்பி வைத்தார். இதேபோல மாணவர்களின் பெற்றோருடன் வட்டார வளர்ச்சி அலுவலர் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். விரைவிலேயே தரமான கட்டிடத்தை கட்டி தருவதாகவும், பராமரிப்பு பணி மேற்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார்.