மீண்டும் தகுதி தேர்வுகள் உயர்கல்வித்துறை அறிவிப்பு!! பேராசிரியராக பணிபுரிய விரும்புவர்களுக்கு குட் நியூஸ்!!
கல்லூரிகளில் ஆண்டுதோறும் நடத்தப்படும் SLET பேராசிரியர் பணிக்கான தகுதிதேர்வு இந்த ஆண்டு நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் கல்லூரிகலுன் உதவி பேராசிரியர்கள் பணிக்கு மற்றும் இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கும் மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த படுகிறது. மேலும் தமிழ்நாடு , கேரளா,கர்நாடகா போன்ற மாநிலங்களின் தனி தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த தேர்வு தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளாக பல காரணங்களால் நடத்தப்படவில்லை. இதன் காரணமாக உயர்கல்வியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களில் தகுதி தேர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழநாட்டில் பல்கலைக்கழகம் பேராசிரியர் பணிக்கு ph.d மற்றும் நெட் தேர்வுகள் முடித்திருக்க வேண்டும். மேலும் யுஜிசி நடத்தும் தேர்வுகள் கடினமாக இருப்பதால் பெரும்பாலும் மாநில அரசு நடத்தும் தகுதி தேர்வுகளை எழுத ஆர்வமாக உள்ளார்கள்.
இந்த நிலையில் தமிழகத்தில் கால்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு தற்போது தகுதி தேர்வு இனி ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் இந்த தேர்வை ஒரு பல்கலைகழகம் எடுத்து நடத்தவேண்டும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளளது. இந்த ஆண்டு SLET தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.