சுதந்திர போராட்டக் காலத்தில் இருந்து இன்று வரை நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் மொழியாக “இந்தி” உள்ளது – அமித்ஷா பேச்சு!!

0
113
#image_title

சுதந்திர போராட்டக் காலத்தில் இருந்து இன்று வரை நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் மொழியாக “இந்தி” உள்ளது – அமித்ஷா பேச்சு!!

கடந்த 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி சுதந்திர இந்தியாவின் அலுவல் மொழி என்ற அந்தஸ்தை ‘இந்தி’ பெற்றது. இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 14 ஆம் நாள் ‘இந்தி திவஸ்’ என்ற பெயரில் இந்த இந்தி மொழி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ‘இந்தி திவஸ்’ விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,இந்தி திவஸ் நாளில் நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தியா பல ஆண்டுகளாக பல்வேறு மொழி பேசும் மக்களை கொண்ட நாடாக இருந்து வருகிறது என்று தெரிவித்த அவர் இந்திய கலாச்சாரத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இந்தி மொழி விளங்குகிறது.இன்று வரை இந்தி ஜனநாயக மொழியாக பார்க்கப்படுகிறது.

இந்த உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக திகழும் இந்தியாவில் பேசப்படும் பல்வேறு மொழிகளுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் மொழியாக ‘இந்தி’ இருக்கிறது.இந்தியாவிற்கு சுதந்திர கிடைத்த காலத்தில் இருந்து இன்று வரை நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் மொழியாக இந்தி திகழ்ந்து வருகிறது.இந்த ஆண்டு நடைபெற உள்ள அகில இந்திய இந்தி மாநாடு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் நடத்தப்படும் என்று தெரிவித்த அவர் ஐக்கிய நாடுகள் சபையிலும் இந்தி மொழியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Previous articleஅட சண்டையெல்லாம் இல்லையாம் பா!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!
Next articleபெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கிய திராவிட மாடல் ஆட்சி!! கரு சுமக்கும் பெண்ணின் குரல் இனிமேல் கருவறையிலும் முதல்வர் அதிரடி!!