இதை செய்தால் நரக வேதனை கொடுக்கும் இடுப்பு வலிக்கு குட் பாய் சொல்லிவிடலாம்!!

0
95
Hip pain
Hip pain

பொதுவாக பெண்கள் பலர் அதிக வேலைப்பளுவால் இடுப்பு வலி,மூட்டு வலி,கழுத்து வலி,கால் வலி போன்றவற்றை அனுபவிக்கின்றனர்.

அதிலும் இடுப்பு வலி வந்துவிட்டால் குனிந்து நிமிர்ந்து வேலை பார்ப்பதில் கடும் சிரமம் ஏற்படும்.இந்த இடுப்பு வலியை நீண்ட காலமாக அனுபவித்து வரும் பெண்களுக்கு அதில் இருந்து விடுதலை கிடைக்க உதவும் பயனுள்ள வீட்டு வைத்திய குறிப்பு கீழே தரப்பட்டுள்ளது.வாரத்தில் மூன்று முறை செய்து வந்தாலே இடுப்பு வலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு உளுந்து – 50 கிராம்

2)தேங்காய்த் துருவல் – கால் கப்

3)பனைவெல்லம் – கால் கப்

செய்முறை:-

படி 01:

முதலில் 50 கிராம் அளவிற்கு உடைத்த கருப்பு உளுந்தை எடுத்து கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

படி 02:

பிறகு கருப்பு உளுந்து மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு ஊறவிட வேண்டும்.

படி 03:

இதனிடையே ஒரு மூடி தேங்காயை பொடியாக துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.

படி 04:

பிறகு பாத்திரம் ஒன்றை எடுத்து கால் கப் பனைவெல்லம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைக்க வேண்டும்.

படி 05:

இதற்கு அடுத்து மிக்சர் ஜார் ஒன்றில் ஊறவைத்துள்ள கருப்பு உளுந்தை போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்தெடுக்க வேண்டும்.

படி 06:

உளுந்து பேஸ்டை பாத்திரத்திற்கு மாற்றி கரைத்து வைத்துள்ள பனைவெல்ல நீரை ஊற்றி கைகளால் நன்கு கரைக்க வேண்டும்.

படி 07:

பிறகு இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

படி 08:

உளுந்தின் பச்சை வாடை நீங்கியதும் தேங்காய் துருவலை அதில் கொட்டி கலந்துவிட வேண்டும்.விருப்பட்டால் சிட்டிகை அளவு ஏலக்காய் சேர்த்துக் கொள்ளலாம்.ஏலக்காய் பிடிக்காதவர்கள் சுக்குத் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த உளுந்து கஞ்சியை வாரம் மூன்று அல்லது நான்கு முறை செய்து பருகி வந்தால் இடுப்புவலி குணமாகும்.

Previous articleகண் கட்டி வந்துவிட்டதா? இதை குணப்படுத்த புளியம் பூவை இப்படி யூஸ் பண்ணுங்க!!
Next articleஅவரச காலங்களில் கை கொடுக்கும் நம் பாட்டி கால வைத்தியங்கள்!!ள்!! 100% பலன் கிடைக்கும்!!