ஐந்து மாவட்டங்களுக்கு இந்த தேதியில் விடுமுறை! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்கின்றதா என பாருங்கள்?
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அவரவர்களின் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதுமட்டுமின்றி பள்ளி மற்றும் கல்லூரிகளில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. போட்டித் தேர்வுகள் மற்றும் பொதுத்தேர்வுகள் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வு வரும் மார்ச் 13ஆம் தேதி தொடங்கவுள்ளது. பொதுத்தேர்வுக்கான பணிகள் அனைத்தையும் தேர்வு துறை தீவிரமாக நடத்தி வருகின்றது. இந்நிலையில் கடந்த மாதங்களில் மாண்டஸ் புயல் மற்றும் பண்டிகை திருநாள் என அனைத்திற்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தற்போது தான் மீண்டும் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மார்ச் 13ஆம் தேதி 5 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி மார்ச் 4ஆம் தேதி மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி மற்றும் சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அன்றைய தினம் திங்கட்கிழமை அட்டவணையின் படி ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்படும். அதற்கு பதிலாக மார்ச் 13-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.