இந்த நாட்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Photo of author

By Rupa

இந்த நாட்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

ஓராண்டுக்கு மேலாக கொரோனா தொற்றின் காரணமாக பள்ளி கல்லூரிகள் ஏதும் திறக்கப்படவில்லை.நடுவில் சில காலம் திறந்தாலும் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றதால் மீண்டும் மூடப்பட்டது.அதனையடுத்து தற்போது  தான் கொரோனா காலகட்டம் முடிந்து  9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் அனைவரும் சுழற்சிமுறையில் பள்ளிக்கு சென்ற பாடங்களைக் கற்பித்து வருகின்றனர்.

பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள் ,ஆன்லைன் மூலமும் பாடங்களை பயின்று வருகின்றனர். மேலும் நேற்று மாலை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதனையடுத்து தற்பொழுது 6 மற்றும் 9 தேதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பொது விடுமுறை என்று தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஏனென்றால் 6 மற்றும் 9 தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தலானது 9 மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலானது இரு கட்டங்களாக நடைபெற இருக்கிறது.தற்பொழுது புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு ,விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி ,வேலூர், ராணிப்பேட்டை ,திருப்பத்தூர் ,திருநெல்வேலி ,தென்காசி ஆகிய மாவட்டங்களில் 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

1g

இந்த மாவட்டங்களில் அனைத்து கட்சியினரும் தேர்தல் பணியை தொடங்கியுள்ளனர்.அதனால் தேர்தல் நடைபெறும் தேதிகளில் 9 மாவட்டங்களில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பொது விடுமுறை என்று கூறியுள்ளனர். அதனையடுத்து உள்ள மற்ற இருபத்தி எட்டு மாவட்டங்களில் தற்செயல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும், 9 ஆம் தேதியன்று சில பகுதிகளுக்கு மட்டும் பொது விடுமுறையை கூறியுள்ளனர்.இந்த விடுமுறைகள் முடிந்து வழக்கம் போல் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என கூறியுள்ளனர்.