இந்த பள்ளி கல்லூரிகளுக்கு மார்ச் 21 ஆம் தேதி வரை விடுமுறை! அரசின் அதிரடி உத்தரவு!
சமீபகாலமாக சிலர் மாணவர்களுக்கிடையே மதமாற்றம் குறித்து அவதூறு பரப்பி வருகின்றனர். இதன் விளைவாக அவர்களுக்கு இடையே மோதல் நிலவுகிறது. இவ்வாறு நடக்கும் மோதலை பலர் அரசியல் ஆக்கி விடுகின்றனர். அந்த வகையில் நமது தமிழகத்தில் தஞ்சாவூர் மாணவியின் தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மதமாற்றம் செய்யும்படி மாணவியை வற்புறுத்தி கூறியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி தமிழகத்தையே உளுக்கியது.
அதுவே இன்றுவரை முடியாத நிலையில் அதற்கடுத்ததாக கர்நாடக மாநிலத்தில் கல்லூரி மாணவிகள் பர்தா அணிந்து வருவதற்கு தடை விதித்தனர். அவ்வாறு தடை விதித்தது மாணவர்களுக்கு இடையே மோதல் நடக்க காரணமாக அமைந்தது. கர்நாடக மாநிலத்தில் கடந்த டிசம்பர் மாதம் பி.யூ கல்லூரியில் படிக்கும் சில முஸ்லிம் மாணவர்கள் வகுப்பறைக்குள் பர்தா அணிந்து வந்துள்ளனர். அவர்கள் பர்தா அணிந்து வந்ததால் மாணவிகளை வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை. இதன் விளைவாக அந்த முஸ்லிம் மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து தர்ணா போராட்டதில் இறங்கினர். அத்தோடு தாங்கள் படிக்கும் கல்லூரி நிர்வாகம் தங்கள் அணியும் உடை சம்பந்தமான காரியங்களில் தலையிடுவதாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தேசிய மனித உரிமை ஆணையத்தில் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
இந்த பர்தா அணியும் விவகாரம் குறித்து கர்நாடக உள்துறை மந்திரி அரக ஞானேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேட்டி அளித்த விதம் நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது.அவர் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில், பர்தா காவி துண்டு ஆகியவற்றை கல்லூரிக்குள் அனுமதிக்க முடியாது. அதேபோல மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு படிக்க மட்டுமே வருகின்றனர் அதை தவிர்த்து பூஜை வழிபாடு போன்றவை நடத்த அல்ல. அதனால் ஹிஜாப் ,காவி துண்டு ஆகியவற்றை அணிந்து மத அடையாளங்களை காட்டும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது எனக் கூறினார்.
இவ்வாறான மத அடையாளங்களை அவரவர் வழிபாட்டு தாளங்களுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். அதேபோல நாம் அனைவரும் இந்தியர் என்ற ஒற்றுமையுடன் பழக வேண்டும். அதுமட்டுமின்றி அனைத்து மாணவர்களும் பாரதமாதாவின் பிள்ளைகள் என்பதை உணர வேண்டும் என இவ்வாறு கூறினார்.அதன் பிறகு மாணவர்கள் அவரவர்குறிய பள்ளி சீருடையில் மட்டுமே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரவேண்டும் என கர்நாடக அரசும் உத்தரவு பிறப்பித்தது. கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கர்நாடக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் போராட்டம் நடத்தினர்.
அதற்கு ஏற்றவாறு கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ஃபாத்திமா , நான் சட்டப்பேரவைக்கு ஹிஜாப் அணிந்து தான் செல்கிறேன் என்னை தடுக்க யாருக்காவது துணிச்சல் உள்ளதா என சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.இவ்வாறு ஒவ்வொரு அரசியல் பிரமுகர்களும் தங்களின் கருத்துக்களை மாறி மாறி கூறி வந்தனர். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் மாநில கல்வி அமைச்சர் நாகேஷ் இதுகுறித்து விவரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியுள்ளது, இந்திய ராணுவத்தில் கடைப்பிடிக்கப்படும் சட்டங்கள் வழிமுறைகள் போலதான் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பின்பற்ற வேண்டும்.
இந்த சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறி நடப்பவர்கள் அவர்கள் காண வழியைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறினார். உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் முடிவானது இன்று வெளிவர உள்ளது. ஏதேனும் கலவரங்கள் நடக்காமல் இருக்க இன்று முதல் வரும் 21ஆம் தேதி வரை பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூடவும், போராட்டங்கள் நடத்தவும் தடைவிதித்துள்ளனர். மேலும் தர்ஷன் கன்னடா, ஷிவ்மோகா என குறிப்பிட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.