அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை  சோதனை! பரபரப்பில் கட்சி தலைமை!!

0
63
ADMK ex-minister's home bribery raid! Party leadership in a frenzy !!

அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை  சோதனை! பரபரப்பில் கட்சி தலைமை!!

அதிமுக ஆட்சியின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் தான் எஸ் பி வேலுமணி. இவர் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரில்,அரசு ஒப்பந்த பணி வாங்கி தருவதாக கூறி ரூ 1.5 கோடி எஸ் பி வேலுமணி தன்னிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக திருவேங்கடம் என்பவர் புகார் அளித்தார்.அந்த புகாரையடுத்து பலர் தங்களுக்கும் அரசு பணி வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக புகார்கள் கொடுத்தனர்.

அந்த வகையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ,எஸ் பி வேலுமணி வீட்டில் அதிரடியாக சோதனை நடத்த தொடங்கினர். இந்த சோதனையானது எஸ் பி வேலுமணி வீட்டில் மட்டுமல்லாமல் அவருக்கு நெருக்கமான சிலரது வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. எஸ் பி வேலுமணி வீட்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் காரணமாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன் தொண்டர்கள் குவிந்தனர் இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

அதிமுக ஆட்சியில் இருந்தபோது 2014ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை செயல்பட்டு வந்த பல்வேறு திட்டப் பணிகளில் எஸ் பி வேலுமணி முறைகேடு செய்துள்ளதாக தெரிவித்தனர்.அதனடிப்படையில் எஸ் பி வேலுமணி உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தனர். அந்து 17 நபர்களான செந்தில் அண்ட் கோ பங்குதாரர் அன்பரசன் ,கேசிபி என்ஜினியர் பிரைவேட் லிமிடெட் ,கேசிபி இன்ஜினியர் ,இயக்குனர் சந்திரபிரகாஷ் , இயக்குநர் சந்திரசேகர் எஸ்பி பில்டர்ஸ் ஆர் முருகேசன் ஜேசு ராபர்ட் ராஜா பி ஆர் கன்ஸ்டிரக்ஷன் ராஜன் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி ஒப்பந்தத்தில் மட்டும் ரூ 464 கோடி எஸ் பி வேலுமணி ஊழல் செய்ததாக இந்த சோதனையின் மூலம் தெரியவந்தது.இவ்வாறு இருக்கையில் எஸ்.பி.வேலுமணிக்கு சம்மன் அனுப்பபட்டது.பின்பு விசாரணை நடத்தினர்.தற்பொழுது, மீண்டும் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இரண்டாவது முறையாக சோதனை நடைதுகின்றனர். அதனால் அவரது வீட்டின் முன்பு தொண்டர்கள் குவிய தொடங்கியுள்ளனர்.மேலும் அவரது வீட்டின் முன்பு பரபரப்பாக காணப்படுகிறது.இந்த சோதனையில் பல கணக்கில் வராத ஆவணங்கள் கைபற்றப்படும் என அரசியல் சுற்றுவட்டாரங்கள் பேசி வருகின்றனர்.