பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! இந்த ஒரு மாவட்டத்திற்கு தான்!
கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியினால் தமிழகம் மற்றும் காரைக்கால் ,புதுவை என அனைத்து இடங்களிலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகின்றது.மேலும் டெல்டா மாவட்டங்களில் அதிக அளவு கனமழை பெய்து வருகின்றது.
கனமழையின் காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.நேற்று தான் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட தொடங்கியது.
கனமழையில் மயிலாடுதுறை ,கடலூர் ,பூம்புகார் ,சீர்காழி போன்ற பகுதிகள் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக சீர்காழியில் மட்டும் 122ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஆறு மணி நேரத்தில் 44 செ.மீ மழை பெய்ந்துள்ளது.தொடர் கனமழை பெய்து வருவதால் சீர்காழி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது.
இந்நிலையில் நேற்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சீர்காழி பகுதியில் மழை பாதிப்புகளை பார்வையிட்டார்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கினார்.அந்த பொருட்களில் பாய் ,போர்வை ,அரிசி ,மளிகை பொருட்கள் அடங்கும்.
அதனையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி ,தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 1000இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கனமழை பாதிப்பு காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி ,தரங்கம்பாடி தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.