சீன அதிபருடனான சந்திப்புக்கு நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்! ஜோ.பைடன்!

0
87

அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட இரு நாடுகளும் உலக அரங்கில் நேரெதிர் துருவங்களாக இருந்து வருகின்றன. சீனாவை பொருத்த வரையில் அமெரிக்காவின் இடத்திற்கு எப்படியாவது நாம் சென்று விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது. அதனை மனதில் வைத்து தான் சீனா நோய் தொற்று பரவலை ஏற்படுத்தியதாக ஒரு கருத்து உலக அளவில் நிலவி வருகிறது.

தொடக்க காலங்களில் அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் இருந்த போட்டி தற்போது அமெரிக்கா, சீனா என மாறி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.ஆசிய கண்டத்தை பொறுத்தவரையில் உலக வல்லரசாக திகழ்வது சீனா. ஆனால் ஆசிய கண்டத்தையும் கடந்து அமெரிக்காவின் இடத்தை கைப்பற்ற வேண்டும் என்று சீனா வெகு நாட்களாக முயற்சி செய்து வருகிறது.

அதற்கு காரணம் என்னவென்றால் சீனா என்னதான் உலக வல்லரசாக இருந்தாலும் அமெரிக்கா ஒட்டுமொத்த உலக நாடுகளையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். உலகளாவிய முக்கிய விவகாரங்களில் அமெரிக்காவின் ஆதிக்கமே அதிகம் இருக்கிறது.

ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில், அமெரிக்காவுடன் நட்பு பாராட்டி வருவதால் இந்தியாவிற்கு எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லை. அதேநேரம் இந்தியாவிற்கு எதிராக அமெரிக்கா ஏதாவது நடவடிக்கைகளில் ஈடுபடுமானால் முதலில் ரஷ்யாவை அமெரிக்கா எதிர்கொண்டாக வேண்டும் அந்த அளவிற்கு ரஷ்யாவுக்கும் இந்தியாவிற்கும் இருக்கின்ற உறவு ஆழமானது.

ஆனால் சீனாவுக்கும் இந்தியாவிற்குமான உறவு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை இன்னும் சொல்லப்போனால் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் நமக்கு எதிராகவும் பலவகாரங்களில் செயல்பட்டு வருகிறது.இதன் காரணமாகவே சீனா அமெரிக்காவின் இடத்தை பிடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறது.

இந்த நிலையில் ஆசிய நாடான இந்தோனேசியாவின் பாலி நகரில் ஜி 20 எனப்படும் பெரும் பொருளாதார நாடுகள் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீனாவின் அதிபர் ஜி. ஜின்பிங்க் இடையே சந்திப்பு நடக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாக தொடங்கினார். இது மிகப்பெரிய பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் உண்டாக்கி இருந்தது.

இந்த இரு நாடுகளும் பொருளாதார மற்றும் ராணுவ பலத்தில் தங்களுடைய வலிமையை காட்ட முயற்சி செய்து வருகின்றன. நோய் தொற்று பரவாலுக்கு முழுக்க முழுக்க சீனாவே காரணம் என்ற விவகாரத்தில் ஆரம்பமான இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தற்போது வரையில் உச்சத்தில் இருந்து வருகிறது. தெய்வானை தனுடன் இணைக்க சீனா முயற்சித்து வருவதற்கு அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், பாலி நகரில் நேற்று இருநாட்டு தலைவர்களும் சந்தித்தனர். இருவரும் புன்னகையுடன் வரவேற்று பரஸ்பரம் கைக்கூலிக்கு உரையாடிக் கொண்டிருந்தார்கள். தங்களுடைய நாட்டுப் பிரதிநிதிகள் உடன் ஒன்றிணைந்து இருதரப்பு உறவுகள் உள்ளிட்டவை தொடர்பாக விவாதம் செய்தனர்.

அமெரிக்க அதிபராக இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜோபைடன் பொறுப்பேற்றுக் கொண்டார் அதன் பின்னர் ஜின் பின் உடன் ஐந்து முறை தொலைபேசியில் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக உரையாற்றியுள்ளார். முதல்முறையாக இருநாட்டு தலைவர்களும் நேற்று நேரில் சந்தித்து உரையாடினர் இந்த பேச்சுக்கு முன்னதாக அமெரிக்க அதிபர் தெரிவித்ததாவது சீன அதிபருடனான பேச்சுவார்த்தைக்கு நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்.

பொறுப்புள்ள தலைவர்கள் என்ற முறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சனைகளை மற்றும் கருத்து வேறுபாடுகளை களைய வேண்டியது நம்முடைய பொறுப்பு என்று தெரிவித்துள்ளார். மேலும் இரு தரப்பு உறவு உடன் சர்வதேச பிரச்சனையில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது நம்முடைய கடமை என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீன அதிபர் தெரிவித்ததாவது, சீனா, அமெரிக்கா இடையிலான உறவின் தற்போதைய சூழ்நிலை இந்த உலகமே எதிர்பார்ப்புடன் உற்றுநோக்கும் ஒரு விவகாரமாக இருக்கிறது. இருநாட்டின் நலனுடன் சர்வதேச நலனையும் நாம் காண வேண்டும் சரியான பாதையில் நம்முடைய உறவு செல்லும் விதத்தில் செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளார்.