கால் ஆணி சரியாக வேண்டுமா? இதோ உங்களுக்கான கசாயம்!

Photo of author

By Kowsalya

 

அளவு குறைந்த காலணிகளை அணிவது, உடல் பருமன் அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தைத் தருகிறது. இந்தக் கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவையே பின்னாளில் அல்சராக மாறுவதற்கும் வாய்ப் பு உண்டு.

தேவையான பொருட்கள்

1. வேப்பிலை – ஒரு கைப்பிடி

2. துளசி இலை. – ஒரு கைப்பிடி

3. வில்வ இலை. – ஒரு கைப்பிடி

4. அத்தி இலை. – ஒரு கைப்பிடி

5. கடுகு. – சிறிதளவு

6. மஞ்சள் தூள் – 2 சிட்டிகை

செய்முறை

வேப்பிலை, துளசி இலை, வில்வ இலை, அத்தி இலை இவை அனைத்தையும் சுத்தப்படுத்திக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 600 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி அதில் மேற்கூறிய இலைகளையும் அதில் சிறிதளவு கடுகு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

நன்றாக கொதிக்க வைத்து 150 மி.லி அளவாக சுண்ட வைத்து கசாயமாக்கி இறக்கி வடிகட்டி குடிக்கவும்

பயன்கள்

இந்தக் கசாயம் கால் ஆணியை குணப்படுத்த உதவும் அருமருந்தாகும். இந்த கசாயத்தை தயார் செய்து காலை மாலை என இருவேளையும் தலா 75 மி.லி அளவாக குடித்து வரவும். இந்தக் கசாயத்தை தொடர்ந்து ஒரு மாதமேனும் சாப்பிட்டு வர வேண்டும்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை 2, மிளகு 2 , உலர் திராட்சை 5 இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

இரவு மூன்று வாழைப்பழத்தோலை கால் பாதத்தின் பக்கம் வைத்து வெள்ளை துணியில் கட்டிவிட வேண்டும். இதே போன்று தொடர்ந்து கட்டி வந்தால் கால் ஆணி குணமாக அதிக வாய்ப்புண்டு. சிகிச்சையோடு இதையும் செய்துவரலாம்.

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.