சுவாச பிரச்சனை தீர வீட்டு மருந்து!

Photo of author

By Kowsalya

கொரோனா நம்மை சுற்றி ஒரு இரும்பு வலையை கட்டி அதனுள் வைத்து நம்மை கொன்று குவித்து வருகிறது. இதற்கு முன் இருந்த காலகட்டத்தில் நுரையீரல் பாதிக்கப்படுவதற்கு புகைபிடித்தல் மட்டுமே காரணம் கிடையாது. நம்மை சுற்றியுள்ள காற்று மாசுபாட்டினால் நுரையீரல் அதிகமாக பாதிப்படைகின்றது. ஆனால் கொரோனாவால் நுரையீரல் பாதிக்கப்பட்டு இறப்போர் எவ்வளவோ பேர். அதை சரிசெய்ய வீட்டில் செய்ய கூடிய மருத்துவத்தை பார்க்க போகின்றோம். இரண்டு ஸ்பூன் அளவு ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர அசுத்தமாக இருக்கும் நுரையீரலை கூட புத்துணர்வு பெற்று ஒழுங்காக இயங்க செய்யும் இயற்கை முறை தான். எப்படி செய்யலாம் என்பதை பாருங்கள் பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள்:

 

1. இஞ்சி ஒரு துண்டு

2. பெரிய வெங்காயம் கால் பங்கு

3. மஞ்சள் சிறிதளவு

4. தேன்

 

செய்முறை:

 

1. முதலில் ஒரு பாத்திரத்தில் 250 மில்லி லிட்டர் தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும்.

2. அதில் ஒரு துண்டு இஞ்சியை எடுத்து சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி போட்டு கொள்ளவும்.

3. பெரிய வெங்காயத்தை கால் துண்டு எடுத்து நறுக்கி சேர்த்து கொள்ளவும்.

4. சிறிதளவு மஞ்சள் சேர்த்துக் கொள்ளவும்.

5. மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் சுண்ட வைக்கவும்.

6. ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

7. இதை காலையில் ஒரு ஸ்பூன் மாலையில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டதற்கு பின் குடித்து வரலாம்.

8. அப்படி நீங்கள் தொடர்ந்து ஒரு வாரம் குடித்து வரும்பொழுது நுரையீரல் சுத்தமாகும். சுவாசப் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் இருக்கலாம்.