உங்கள் தலையில் உள்ள பேன் ஈறுகளை ஒழிக்கும் வீட்டு வைத்திய குறிப்புகள்!!

Photo of author

By Divya

உங்கள் தலையில் உள்ள பேன் ஈறுகளை ஒழிக்கும் வீட்டு வைத்திய குறிப்புகள்!!

தலையில் இருக்கின்ற பேன்,ஈறுகளை ஒழிக்க உதவும் வீட்டு வைத்திய குறிப்புகள் இதோ.

தீர்வு 01:-

அரளி பூ

ஒரு கப் அரளி பூவை நீரில் போட்டு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.

இந்த பேஸ்டை தலை முழுவதும் அப்ளை செய்து 1/2 மணி நேரம் கழித்து தலையை அலசினால் பேன்,ஈறு முழுமையாக நீங்கும்.

தீர்வு 02:-

துளசி
எலுமிச்சை சாறு

ஒரு கைப்பிடி துளசி இலையை நீரில் போட்டு அலசவும்.பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் இந்த இலைகளை போட்டு மைய்ய அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.

பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.இந்த பேஸ்டை தலை முழுவதும் அப்ளை செய்து 1/2 மணி நேரம் கழித்து தலையை அலசினால் பேன்,ஈறு முழுமையாக நீங்கும்.

தீர்வு 03:-

1)சீத்தாப்பழ விதை
2)சீகைக்காய் தூள்

ஒரு கப் அளவு சீத்தா பழ விதை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

இந்த பொடியை சீகைக்காய் பொடியில் போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.இதை தலைக்கு அப்ளை செய்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன்,ஈறு முழுமையாக நீங்கும்.

தீர்வு 04:-

1)வேப்பிலை
2)தண்ணீர்

ஒரு கப் அளவு வேப்பிலையை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.இந்த பேஸ்டை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் பேன்,ஈறு அடியோடு நீங்கும்.