பொடுகு பாதிப்பை குணமாக்க உதவும் வீட்டு வைத்திய குறிப்புகள்!

0
353
#image_title

பொடுகு பாதிப்பை குணமாக்க உதவும் வீட்டு வைத்திய குறிப்புகள்!

குறிப்பு 01:-

1/4 லிட்டர் தேங்காய் எண்ணெயை சூடாக்கி 25 கிராம் ஓமம் சேர்த்து பொரிய விடவும். பின்னர் இந்த எண்ணையை ஆறவிட்டு தலைக்கு பயன்படுத்தி வந்தால் பொடுகு பாதிப்பு நீங்கும்.

குறிப்பு 02:-

தேங்காய் எண்ணெய் மற்றும் வேப்ப எண்ணெயை சம அளவு எடுத்து காய்ச்சி ஆறவைத்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் பொடுகு பாதிப்பு நீங்கும்.

குறிப்பு 03:-

தேவையான அளவு கடுக்காயை அரைத்து புளித்த தயிரில் சேர்த்து ஊறவைத்து தலைக்கு அப்ளை செய்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

குறிப்பு 04:-

ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை பேஸ்ட் பதத்திற்கு அரைத்து தலைக்கு பயன்படுத்தி குளித்தால் பொடுகு பிரச்சனை தீரும்.

குறிப்பு 05:-

2 ஸ்பூன் வெந்தயத்தை 1 டம்ளர் நீரில் 8 மணி நேரம் ஊற வைத்து பின்னர் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து தலைக்கு பயன்படுத்தி குளித்தால் பொடுகு பிரச்சனை தீரும்.

குறிப்பு 06:-

சின்ன வெங்காயம் மற்றும் ஊறவைத்த வெந்தயம் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு பயன்படுத்தி குளித்தால் பொடுகு பிரச்சனை தீரும்.

Previous articleதனுஷ் குடும்பத்திற்கு விஜயகாந்த் செய்த காரியம்! இப்படியும் இருப்பாங்களா!
Next articleஎப்பேர்ப்பட்ட நோய்களையும் குணாக்கும் இந்த ஒரு கிழங்கு நியாபகம் இருக்கா?