மலச்சிக்கலா? ஒரு ஸ்பூன் போதும் இதை சாப்பிடுங்க உங்க முழு வயிறு சுத்தமாகிவிடும்!

Photo of author

By Kowsalya

மலச்சிக்கலா? ஒரு ஸ்பூன் போதும் இதை சாப்பிடுங்க உங்க முழு வயிறு சுத்தமாகிவிடும்!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு உணவுப் பழக்கங்களாலும் டீஹைடிரேஷன் என்று சொல்லக்கூடிய தண்ணீர் அருந்தாமல் உடம்பில் நீர் வற்றி மலச்சிக்கல் ஏற்பட்டு விடுகின்றது. இந்த மலச்சிக்கல் பல்வேறு நோய்களுக்கு காரணமாகி விடுகின்றது. அதனால் மலச்சிக்கலை போக்கி உங்கள் வயிற்றில் உள்ள நச்சுக்களை ஒரே நாளில் வெளியேற்றுவதற்கு இயற்கை வழிமுறைகளைப் பார்ப்போம்.

முறை 1:

தேவையான பொருட்கள்:

1. தயிர் 2 ஸ்பூன்

2. சீரகப் பொடி அரை ஸ்பூன்.

3. ஆலிவ் ஆயில் ஒரு ஸ்பூன்.

செய்முறை:

1. ஒரு பவுளை எடுத்து கொள்ளவும்.

2. அதில் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்துக் கொள்ளவும்.

3. அரை டீஸ்பூன் அளவிற்கு நன்கு வறுத்து பொடி செய்த சீரக பொடியை எடுத்து சேர்த்துக் கொள்ளவும்.

4. அரை டீஸ்பூன் அளவிற்கு விர்ஜின் ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொள்ளவும்.

5. நன்றாக கலக்கி கொள்ளவும்.

இதனை எப்பொழுது சாப்பிட வேண்டுமெனில் இதனை காலையில் உணவு சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் கழித்து கூட இதனை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். மதிய உணவிற்கு பின்பு எடுத்துக் கொள்ளலாம். இரவில் தயிர் சாப்பிட வேண்டாம்.

இதனை நீங்கள் தொடர்ந்து எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனை நீங்கள் சாப்பிட்டு வரும் பொழுது மலச்சிக்கல் என்பது உங்களுக்கு இருக்கவே இருக்காது. அதே போல் வயிற்றில் உள்ள நச்சுக்களை முழுவதும் மலம் வழியே வெளியேற்றி விடும்.

முறை 2:

தேவையான பொருட்கள்:

1. ஆலிவ் ஆயில் ஒரு ஸ்பூன்

2. உப்பு தேவையான அளவு.

செய்முறை:

1. ஒரு டம்ளர் சூடான தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் ஒரு ஸ்பூன் அளவுக்கு ஆலிவ் ஆயிலை கலந்து கொள்ளவும்.

3. விருப்பமுள்ளவர்கள் ஆமணக்கு எண்ணெய் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

4. அதில் ஒரு பின்ச் உப்பு போடவும்.

இதை நன்கு கலந்து விட்டு காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். இதை குடித்தால் 10 நிமிடத்தில் உங்கள் உடம்பில் உள்ள அனைத்து நச்சுக்களும் மலம் வெளியே அடித்துக் கொண்டு வந்துவிடும்.இதை வாரம் ஒரு முறை பயன்படுத்தி வந்தால் போதுமானது.உங்களது உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள  ஏதேனும் ஒரு முறையை பின்பற்றுங்கள்.