திருப்பூர் மாவட்டத்தில் நடந்த கோர விபத்து! தொழிலாளி சம்பவம் இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலி!

Photo of author

By Parthipan K

திருப்பூர் மாவட்டத்தில் நடந்த கோர விபத்து! தொழிலாளி சம்பவம் இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலி!

Parthipan K

Horrible accident in Tirupur district! The worker was crushed to death on the spot!

திருப்பூர் மாவட்டத்தில் நடந்த கோர விபத்து! தொழிலாளி சம்பவம் இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலி!

திருப்பூர் மாவட்டத்தில் தாதாபுரத்தை அடுத்த ருத்ராவதி அருகே கரிசக்காட்டு புதூரில் வசித்து வருபவர் தர்மலிங்கம். இவரது மனைவி வசந்தி வயது 40 மற்றும் குழந்தைகள் புவன் குமார் (12) அனுஸ்ரீ. மேலும் தாதாபுரத்தையடுத்த குண்டத்தில் காலபைரவர் என்ற பெயரில் எலக்ட்ரானிக் கடை வைத்து நடத்தி வருகிறார்.

மேலும் காரில் குண்டம் நோக்கி வந்த கொண்டிருந்தபோது குண்டம் முதல் கோவை வரை சாலை விரிவாக்க பணிக்காக ஜல்லிக்கட்டு ஏற்றி வந்த லாரி ஓட்டுனர் பாஸ்கர்(30). பாஸ்கரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி  திடீரென கார் மீது நேருக்கு நேராக மோதி விபத்து நடந்தது.

மேலும் இந்த விபத்தில் எலக்ட்ரானிக் கடை அதிபர் தர்மலிங்கம் சம்பவ  இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து கூறித்து  அக்கம்பக்கத்தினர் குண்டடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலின் படிகுண்டடம் போலீசார் சம்பவயிடத்திற்கு வந்து தர்மலிங்கத்தின்  உடலை கைப்பற்றி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிரேத பரிசோதனைக்காக சவக்கிடையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் லாரி ஓட்டுநரை கைது செய்து வழக்கு பதிவு செய்ததுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.