ஓமலூர் அருகே கோர விபத்து!.நண்பரின் கண்ணெதிரே பெண் தோழி தலை நசுங்கி பலி!.

ஓமலூர் அருகே கோர விபத்து!.நண்பரின் கண்ணெதிரே பெண் தோழி தலை நசுங்கி பலி!.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கோட்டைமேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தான் சிவகுமார்.இவருடைய மகள் சிவகாமி.இவர் சம்பவ தினத்தன்று தனது ஆண் நண்பன் ஸ்ரீதருடன் சொந்த வேலை காரணமாக மேச்சேரி சென்றுள்ளார்கள்.வேலைகளை முடித்த பின்னர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்திருந்தனர்.

அப்போது ஓமலூர் பிருந்தாவனம் தியேட்டர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்து கொண்டிருந்த மற்றொரு இருசக்கர வாகனம் பலத்த வேகத்துடன் இவர்களின் மீது மோதியது.இதில் வாகனத்தில் வந்த ஸ்ரீதர் மற்றும் சிவகாமி தூக்கி வீசப்பட்டார்.வீசப்பட்டதில் சிவகாமி நிலைகுலைந்து வலது பக்கமாக விழுந்துள்ளார்.

அந்நேரமாக பார்த்து சங்ககிரியிலிருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி சிவகாமி தலையில் மீது ஏறிச் சென்றது.இதனால் ரத்தம் வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.

இதனையடுத்து அங்குள்ளவர்கள்  காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார்கள் தகவலின் பேரில் விரைந்து வந்த போலீஸ் அதிகாரிகள் சிவகாமியின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திவருகிறது.

Leave a Comment