மதுரையில் துர்கா என்ற ஓட்டல் முனிசாலை பகுதியில் செயல்பட்டு வருகின்றது. இந்த உணவகத்தில் சாப்பிடுவதற்காக வசந்தன், சதீஷ், வாசுதேவன், செல்வகுமார் ஆகிய 4 பேர் உணவகத்திற்குள் வந்து சாப்பிட உட்கார்ந்தனர். தொடர்ந்து ஓட்டலில் சாப்பிடாமல் அங்கே மது அருந்த துவங்கியுள்ளனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டல் ஊழியர் இங்கே மது அருந்தக்கூடாது. சாப்பிட மட்டும்தான் உணவகத்திற்கு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே, மது போதையில் இருந்த அவர்கள் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தாங்கள் வைத்திருந்த கத்தி அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களால் அவரை 15க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டி இருக்கின்றனர். ஊழியரை தாக்கி விட்டு அங்கிருந்து அந்த கும்பல தப்பிச் சென்றுள்ளது.இதனைத் தொடர்ந்து காயமடைந்த ஊழியர் ராஜாஜி மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் ஊழியரை அரிவாளால் வெட்டிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. பட்டப்பகலில் மது அருந்திவிட்டு ஓட்டல் ஊழியரை தாக்கி இருக்கும் சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.