வீட்டின் விலை உயரும்!! மக்களுக்கு அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி!!

0
114
House prices will go up!! People will be shocked!!
House prices will go up!! People will be shocked!!

வீட்டின் விலை உயரும்!! மக்களுக்கு அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி!!

தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறையின் சேவை கட்டணம் உயர்த்தப்பட்டு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதாவது, ரசீது ஆவணத்திற்கான பதிவு கட்டணம் ரூபாய் இருபதிலிருந்து ரூபாய் இருநூறு ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மேலும், குடும்ப நபர்களுக்கு இடையேயான பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கான கட்டணம் ரூபாய் 4,000 முதல் ரூபாய் 10,000 எனவும், அதிகபட்ச முத்திரை தீர்வுக்கான கட்டணம் ரூபாய் 25,000 முதல் ரூபாய் 40,000 வரையிலும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

 மேலும், தனியாக வீட்டை பதிவு செய்வதற்கான கட்டணம் ரூபாய் 200 லிருந்து ரூபாய் 1000 ஆகவும், குடும்ப உறுப்பினர்கள் இல்லாமல் பொது அதிகார ஆவணங்களுக்கான கட்டணம் ரூபாய் 10,000 என்று இருப்பதை சொத்தினுடைய சந்தை மதிப்பிற்கு ஒரு சதவிகிதம் ஆகவும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

 இந்த கட்டண உயர்வால் பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த கட்டண உயர்வு புதிய வீடுகளின் கட்டுமானத்தையும் மிகவும் பாதிக்கக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பத்திரப்பதிவுத்துறையின் சேவை கட்டணம் உயர்ந்ததை அடுத்து மனைகளின் விலை மூன்று முதல் ஐந்து சதவிகிதம் வரை உயரும் என்று கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் கூறி வருகின்றனர்.

அதாவது, ஒரு வீடு கட்ட முப்பது லட்சம் செலவாகும் இடத்தில் கூடுதலாக ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை சேர்த்து செலவாகும் என்று கூறப்படுகிறது.

இந்த கட்டண உயர்வு புது வீடுகள் கட்டும் உரிமையாளர்களை மிகவும் பாதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. தற்போது காய்கறிகளின் விலை மற்றும் மளிகைப் பொருட்களின் விலை உயர்வால் சிரமத்தில் இருக்கும் மக்களுக்கு கூடுதலாக இதுவும் சேர்ந்துள்ளது.

இந்த பத்திரப்பதிவு சேவை உயர்வு கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டி மக்கள் அனைவரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Previous articleகால்வாயில் கவிழ்ந்த பஸ்!! திருமண விருந்துக்கு சென்றபோது நேர்ந்த சோகம்!! 
Next articleஇனிமேல் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தான்!! அங்கீகாரம் அளித்த தேர்தல் ஆணையம்!!