இல்லத்தரசிகளே கேஸ் திடீரென்று தீர்ந்து விட்டதாக கவலை வேண்டாம்:! இனி உங்கள் ரேஷன் கடைகளில் சிலிண்டர் விற்பனை!

Photo of author

By Pavithra

இல்லத்தரசிகளே கேஸ் திடீரென்று தீர்ந்து விட்டதாக கவலை வேண்டாம்:! இனி உங்கள் ரேஷன் கடைகளில் சிலிண்டர் விற்பனை!

Pavithra

இல்லத்தரசிகளே கேஸ் திடீரென்று தீர்ந்து விட்டதாக கவலை வேண்டாம்:! இனி உங்கள் ரேஷன் கடைகளில் சிலிண்டர் விற்பனை!

இன்று முதல் ரேஷன் கடையில் புதிய திட்டம் அமலுக்கு வருவதாக கூட்டுறவு துறை
அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் அண்மையில் தெரிவித்திருந்தார். இதன்படி தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அக்டோபர் ஆறாம் தேதியான இன்று 5 கிலோ மற்றும் 2 கிலோ எடை உள்ள சிலிண்டர் விற்பனை செய்யப்படும் திட்டம் அமலுக்கு வர இருக்கிறது.

அதாவது இத்திட்டத்தை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டியுசிஎஸ் எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் காமதேனு பால் பொருள் அங்காடியில் இன்று இந்த விற்பனை முதலில் துவக்கப்பட உள்ளது.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பல்பொருள் அங்காடிகள் மற்றும் ரேஷன் கடைகளில் சிலிண்டர் விற்பனை செய்யும் திட்டம் விரிவாக்கப்படும் என்று கூட்டுறவு துறை வட்டாரங்கள் அறிவித்துள்ளனர்.