பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக இருக்கும் 300க்கும் மேற்பட்ட பணியிடங்கள்! முழு விவரம் உள்ளே!

0
223

நிர்வாகம் மற்றும் தொழில்முறை வேலைகள் தொடர்பாக ஆள் சேர்க்கை அறிவிப்பை இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பேங்க் ஆப் பரோடா வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம்.

காலியிடங்கள்- 346

கல்வித் தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதாவது ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலாண்மை பாடநெறியில் இரண்டு வருடங்கள் முழு நேர முழுநிலை பட்டப்படிப்பு டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் கூடுதல் நன்மை.

இத்துடன், இந்தியாவில் செயல்படும் அரசு மற்றும் தனியார் மற்றும் சர்வதேச வங்கிகளில் தொடர்பு மேலாளராக 2 வருட அனுபவம் பெற்றிருந்தால் மிகவும் சிறப்பு. 1-10-2022 அன்று விண்ணப்பதாரர்கள் வயது 24 க்கு மேலும் 40 வயதிற்கு கீழும் இருக்க வேண்டும்.

கல்விக்கான தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதாவது ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலாண்மை பாடத்தில் 2 வருடங்கள் முழுநேர முதுநிலை பட்டப்படிப்பு, டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் கூடுதல் நன்மை.

இதனுடன் வல மேலாண்மை துறையில் இந்தியாவில் இருக்கின்ற அரசு மற்றும் தனியார் சர்வதேச வங்கிகளில் தொடர்பு மேலாளராக 1.5 வருட அனுபவம் இருந்தால் நன்றாக இருக்கும். 1-10- 2022 அன்று விண்ணப்பதாரர்களின் வயது 23க்கு மேலும் 35 வயதிற்கு கீழும் இருத்தல் வேண்டும்.

கல்விக்கான தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதாவது ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலாண்மை பாடநெறியில் 2 வருடங்கள் முழுநேர முதுநிலை பட்டப்படிப்பு, டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் கூடுதல் நன்மை.

இத்துடன் நிதி சேவையில் குறைந்தது 10 வருடங்கள் இருத்தல் வேண்டும். 1-10-2022 அன்று விண்ணப்பதாரர்களின் வயது 31 க்கு மேலும் 45க்கு கீழும் இருத்தல் வேண்டும்.

தேர்வு முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் இது முழுக்க முழுக்க ஒப்பந்தத்தின் அடிப்படையிலான பணி ஆகும் 5 வருடங்களுக்குப் பிறகு செயல்த்திறன் அடிப்படையில் பணிக்காலம் நீடிக்கப்படும்.

Www. bankofbaroda.co.in என்ற இணையதள பக்கத்தின் மூலமாக வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Previous articleஇல்லத்தரசிகளே கேஸ் திடீரென்று தீர்ந்து விட்டதாக கவலை வேண்டாம்:! இனி உங்கள் ரேஷன் கடைகளில் சிலிண்டர் விற்பனை!
Next articleதவறான நபருக்கு பணம் அனுப்பி விட்டால் அந்த பணத்தை திரும்பி வாங்க முடியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here