குடும்பத்தலைவிகளிடம் சிறுதொழில் ஆசை!! மோசடி செய்த திமுக பிரமுகர்!!

Photo of author

By CineDesk

குடும்பத்தலைவிகளிடம் சிறுதொழில் ஆசை!! மோசடி செய்த திமுக பிரமுகர்!!

CineDesk

Housewives want a small business!! DMK personality who cheated!!

குடும்பத்தலைவிகளிடம் சிறுதொழில் ஆசை!! மோசடி செய்த திமுக பிரமுகர்!!

மளிகைபொருட்களை பேக்கிங்  செய்து சுலபமாக மாதம் 10 ஆயிரம் வரை சாம்பாதிக்கலாம் என கூறி மோசடி செய்த தம்பதிகள்.  சென்னை அரும்பக்கத்தில் உள்ள அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மகாதேவ பிரசாத். இவர் “மோகா” என்ற பெயரில் மளிகைப்பொருட்களை  ஏற்றுமதி செய்து வந்தார்.  இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பெண்களிடம் தனது நிறுவனத்தில் 25 ஆயிரம் முதலீடு செய்தால்,  மளிகைப்பொருட்கள்  மொத்தமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை எடைக்கு தகுந்தாற்போல் பேக்கிங் செய்து வழங்க வேண்டும்.

தாங்கள் செய்யும் வேலைக்கு  ஏற்ப மாதம் ரூ.3 ஆயிரம் முதல்  ரூ.10ஆயிரம் வரை கமிஷன் தொகை வழங்கப்படும்.  மேலும் முதலீடு செய்த ரூ 25 ஆயிரம் ஒரு வருடத்திற்குள் திரும்ப வழங்கப்படும் என்றும் இதனால் பெண்கள் வருமானம் ஈட்டி வாழ்வில் முன்னேற்றம் அடையலாம் என கூறியிருந்தார். இதையடுத்து அரும்பாக்கம் மற்றும்  எம்.எம்.டி.ஏ. காலனி பகுதிகளை சேர்ந்த பெண்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.  முதலீடு செய்தவர்களுக்கு முதல் ஓரிரு மாதங்கள் கமிஷன் தொகை வழங்கியிருக்கிறார். பிறகு அந்த நிறுவனத்தை மூடிவிட்டு மகாதேவபிரசாத் குடுபத்தினருடன் தலைமறைவாகிவிட்டார்.

இதனை தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் அவரின் வீட்டை கண்காணித்து வந்துள்ளனர்.  கடந்த வெள்ளிக்கிழமையன்று மகாதேவபிரசாத், தன்னுடைய நிறுவன ஊழியர்கள் மூலம் வீட்டை காலி செய்து கொண்டிருந்தார். இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் அந்த ஊழியர்களை பிடித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த 60 க்கும் மேற்ப்பட்ட  பெண்கள் கடந்த சனிக்கிழமை அன்று சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்திற்கு சென்று மோசடி செய்த மகாதேவபிரசாத் மற்றும் அவரது மனைவி ஜெயஸ்ரீ ஆகிய இருவரையும் கைது செய்யவேண்டும் என்றும் தாங்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்களிடம், மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷ்னர் ஜான் பிரிட்டோ, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி மோசடி செய்த தம்பதிகள் இருவரையும் கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்கள் தனித்தனியாக புகார் கொடுத்துவிட்டு சென்றனர்.  இந்த புகார்களின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த தம்பதிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மகாதேவபிரசாத் மற்றும் அவரது மனைவி ஜெயஸ்ரீ ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர் திமுக வட்ட பிரமுகர் என்று கூறப்படுகிறது.