ஜெர்சி இன பசுக்களை வாங்க ஆவின் நிறுவனம் முடிவு!! விவசாயிகளுக்கு முன்னுரிமை!!

0
162
Avin's company decided to buy Jersey cows!! Priority for farmers!!
Avin's company decided to buy Jersey cows!! Priority for farmers!!

ஜெர்சி இன பசுக்களை வாங்க ஆவின் நிறுவனம் முடிவு!! விவசாயிகளுக்கு முன்னுரிமை!!

ஆவின் நிறுவனம் வெளி மாநிலகளில் இருந்து 2 லட்சம் ஜெர்சி இன பசுக்களை வாங்க முடிவு செய்துள்ளது. ஆவின் நிறுவனத்திற்கு பால் ஊற்றும் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் ஜெர்சி இன பசுக்களை வாங்க முடிவெடுத்துள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாடுகளும் 50 ஆயிரம் முதல்  70 ஆயிரம் விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆவின் நிறுவனம் தினசரி தமிழ்நாடு முழுவதும் உள்ள பால் உற்பத்தியாளர்களிடமிருந்து 36 லட்சம் லிட்டர்  பால் கொள்முதல் செய்கிறது. 1 லிட்டர் பசும்பால்  ரூ. 35 க்கும், எருமைப்பால்  ரூ. 42 க்கும் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்து வருகிறது. ஆனால்  தனியார் பால் நிறுவனங்கள் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து அதிக விலைக்கு கொள்முதல் செய்வதால் பால் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இதை பற்றி பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்திய போது, அவர்கள்  பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். இதை பற்றிய பேச்சுவார்த்தை நடைபெற்றதில் சில கோரிக்கைகள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. சில கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளது. இதன் காரணமாக சில பால் உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனங்களுக்கு பால் ஊற்றுவதால் ஆவின் நிறுவனத்திற்கு பால் தட்டுப்பாடு இருக்கிறது.

தற்போது 9673 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து, 3.99 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால்  கொள்முதல் செய்யப்படுகிறது. அனால் இந்த பால் ஆவின் நிறுவனத்திற்கு போதுமானதாக இல்லை. அதிக பால் கொள்முதலுக்காக வெளிமாநிலங்களில் இருந்து 2 லட்சம் ஜெர்சி பசுக்களை வாங்க முடிவு செய்துள்ளது.  இதற்காக கூட்டுறவு பால் சொசைட்டியில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஜெர்சி மாடுகளை வங்கி கடன் மூலம் வாங்கி கொடுத்து பால் உற்பத்தியை அதிகரிப்பதே இதன் நோக்கம் எனவும் இதற்காக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் வங்கி கடனை பெறுவதற்கு சிரமங்கள் இருக்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் நிறுவனம் உதவி செய்யும். இந்த வங்கி கடனுக்கான மாதாந்திர தவணைகளை செலுத்துவதற்கான உத்திரவாதத்தை ஆவின் வழங்குகிறது. மாதாந்திர தவணை தொகை  பால் பில்லில் சேர்க்கப்பட்டு, தினசரி பால் ஊற்றும் போது கணக்கில் வைக்கப்பட்டு,  மாதாமாதம் அந்த தொகை  கழிக்கப்படும் என கூறப்படுகிறது. ஆவினுக்கு சங்கம் மூலம் பால் ஊற்றும் விவசாயிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
CineDesk