அவர் எப்படி இப்படி செய்யலாம்? இந்திய வீரர்கள் கடும் கோபம்! காரணம் என்ன?
கேப்டவுனில் நடைபெற்று வரும் இந்திய – தென் ஆப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற 211 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ஏய்டன் மர்க்ரம் 16 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். இதனால் இந்திய அணியின் வீரர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர்.
இதை தொடர்ந்து வந்த தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டீன் எல்கர் 22 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டத்தின் 20வது ஓவரில் அஸ்வின் வீசிய பந்தில் டீன் எல்கர் எல்.பி.டபள்யூ அவுட் ஆனார். கள நடுவரும் அதற்கு அவுட் கொடுத்துவிட்ட நிலையில், டீன் எல்கர் 3வது நடுவரிடம் ரிவ்யூவ் கேட்டார். அதில் பந்து ஸ்டம்பில் பட்டிருக்காது, விக்கெட் மிஸ்ஸிங் என்பது போன்ற வீடியோவை காண்பித்து நாட் அவுட் கொடுத்தார் மூன்றாவது நடுவர்.
இதனால் இந்திய வீரர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு சுழற்பந்துவீச்சாளர் போட்ட குட் லெந்த் பந்தானது எப்படி திடீரென பவுன்சாகி ஸ்டம்பிற்கு மேல் எழுந்தது என்பது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் 3வது நடுவர் டி.ஆர்.எஸ் முடிவில் ஏமாற்று வேலை செய்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
அந்த நிகழ்வில் எல்கருக்கு நாட் அவுட் கொடுத்ததன் மூலம் அதிலிருந்து அந்த அணியினர் 50 ரன்களுக்கும் மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வந்தனர். இந்த நிலையில் பும்ரா வீசிய பந்தில் எல்கர் எட்ஜாகி கேட்ச் அவுட்டானார். ஆனால் அதற்கு கள நடுவர் நாட் அவுட் கொடுத்த நிலையில் சற்றும் யோசிக்காமல் 3வது நடுவரிடம் ரிவ்யூவ் செய்தார் விராட் கோலி. அதில் பந்து நன்கு பேட்டில் எட்ஜாகி இருந்தது தெரியவந்தது. இதனால் இந்த முறை எல்கருக்கு அவுட் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் இந்திய அணி மீண்டும் ஆட்டத்திற்குள் நுழைந்துள்ளது.