இப்படி எத்தனை வழக்குகளை தான் போடுவீர்கள்??- காட்டமான நீதிபதி இனிமேல் இவற்றை ஓபிஎஸ் பயன்படுத்தக்கூடாது என அதிரடி தடை!! 

0
44
#image_title

இப்படி எத்தனை வழக்குகளை தான் போடுவீர்கள்??- காட்டமான நீதிபதி!! இனிமேல் இவற்றை ஓபிஎஸ் பயன்படுத்தக்கூடாது என அதிரடி தடை!! 

அதிமுக  கட்சிக்கு சொந்தமான கொடி மற்றும் பெயரை இனிமேல் ஓபிஎஸ் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிமுக கட்சியில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையிலான பூசல்களும் அது தொடர்பான வழக்குகளும் தொடர்ந்து நடைபெறும் ஒன்று. நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரித்த பின்னும் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கட்சியின் கொடி மற்றும் பெயரை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக அதிமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஏற்கனவே கட்சி பொறுப்பில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக அதிரடியாக நீக்கியது. இருப்பினும் கொடி மற்றும் பெயரை ஓபிஎஸ் பயன்படுத்தி வருவதால் அதற்கு தடை விதிக்க கோரி எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக உள்ள  எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்-க்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருப்பதாவது,

ஐகோர்ட்டும், தேர்தல் ஆணையமும் என்னை அதிமுகவின் பொதுச் செயலாளராக ஏற்கனவே அங்கீகாரம் செய்து விட்டன. மேலும் ஓபிஎஸ்-ஐ கட்சியிலிருந்து நீக்கிய பின்னரும் அவர் தன்னை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறி வருவதோடு மட்டுமில்லாமல் கட்சியின் கொடி மற்றும் பெயரை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.

ஓபிஎஸ் இவ்வாறு செய்து வருவதால் தொண்டர்களிடையே கடுமையான குழப்பம் நிலவி வருகிறது. எனவே அவர் கட்சியின் கொடி, சின்னம் மற்றும் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

இந்த மனுவின் மீதான விசாரணை கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை இன்று நவம்பர் 7-ஆம் தேதி ஒத்தி வைத்திருந்தது. அதன்படி இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி சதீஷ்குமார் தலைமையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது இபிஎஸ் தரப்பில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னரும் அதே பதவியை ஓபிஎஸ் பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் காட்டமான நீதிபதி எத்தனை முறை தான் இப்படி வழக்கு தொடர்வீர்கள்?? நேரம் கேட்பீர்கள்?? ஒரே வாதத்தை தொடர்ந்து வைத்து வருவீர்கள்!! என கேள்வி எழுப்பினார்.

பின்னர் அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேடு, போன்றவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்துவதற்கு இடைக்கால தடைவிதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.