கேரளா ஸ்டைலில் இறால் தொக்கு செய்வது எப்படி?

0
229
#image_title

கேரளா ஸ்டைலில் இறால் தொக்கு செய்வது எப்படி?

அதிக ருசி கொண்ட இறால் மீனை வைத்து கேரளா ஸ்டைலில் தொக்கு செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

தேவையான பொருட்கள்:-

*இறால் (சுத்தம் செய்து) – 250 கிராம்

*பெரிய வெங்காயம் – 100 கிராம்(நறுக்கியது)

*கரம் மசாலா – 1 தேக்கரண்டி

*எண்ணெய் – 3 தேக்கரண்டி

*தக்காளி – 100 கிராம்(நறுக்கியது)

*இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 தேக்கரண்டி

*மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி

*மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

*சோம்பு – 1/2 தேக்கரண்டி

*பச்சை மிளகாய் – 2(நறுக்கியது)

*கறிவேப்பிலை – 1 கொத்து

*கொத்தமல்லித் தழை – சிறிதளவு

*உப்பு – தேவையான அளவு

செய்முறை…

அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு சேர்த்து பொரிய விடவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.

அடுத்து கறிவேப்பிலை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வதக்கவும்.

பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை போட்டு கிளறவும். அடுத்து கரம் மசாலாத்தூள் மற்றும் நறுக்கிய கொத்துமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

இந்த தொக்கு சப்பாத்தி, பூரி, சாதத்திற்கு சிறந்த காமினேஷன் ஆகும்.

Previous articleபல்லி எச்சத்தால் வாயில் ஏற்படும் புண் குணமாக இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!
Next articleஎந்த காரியத்திற்கு எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?