10 நாளில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இந்த 1 ஜூஸ் குடியுங்கள்!!
உடலானது சீராக இயங்க வேண்டும் என்றால் கட்டாயம் ஹீமோகுளோபின் அளவானது அதிகமாக இருப்பது அவசியம். ஹீமோகுளோபின் ஆனது நமது உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்சிஜனை கடத்தும் ஒரு செயலியாக வேலை செய்து வருகிறது. அதேபோல நமது உடலில் போதுமான அளவிற்கு ஹீமோகுளோபின் இல்லை என்றால் இதன் செயல்பாடுகள் அனைத்தும் நிற்க தொடங்கி விடும்.இதர உறுப்புகள் எதற்கும் ஆக்சிஜன் கிடைக்காது. நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து ஹீமோகுளோபினை சுலபமாக அதிகரிக்கச் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
கருவேப்பிலை
முருங்கை கீரை
கருவேப்பிலையானது இரும்புச்சத்து குறைபாட்டை சரி செய்ய உதவும்.
கருவேப்பிலையை எடுத்துக் கொள்வதால் உடலில் ரத்தத்தின் அளவானது அதிகரிக்கக்கூடும்.
அதுமட்டுமின்றி அனிமியா பிரச்சனைக்கும் இந்த கருவேப்பிலையானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உணவுடன் இதனை சேர்த்து சமைக்கும் பொழுது தனியாக எடுத்து ஒதுக்காமல் சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
முருங்கைக்கீரையில் வைட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி உள்ளது.
இது ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பங்கில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
இதனை தினம்தோறும் எடுத்துக் கொள்வதால் இரும்பு சத்து குறைபாடு இரத்தசோகை போன்றவை வராமல் தடுக்கலாம்.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
பின்பு இதில் ஒரு கைப்பிடி அளவிற்கு கருவேப்பிலை மற்றும் முருங்கைக்கீரை சேர்க்க வேண்டும்.
இதனை நன்றாக கொதிக்க விட வேண்டும்.
நன்றாக கொதித்து அரை லிட்டர் தண்ணீர் ஒரு டம்ளர் வரும் வரை சுண்டு ஏதும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
இது வெதுவெதுப்பான இருக்கும் நேரத்தில் பருகலாம்.
சுவைக்கேற்ப சிறிதளவு உப்பு சேர்த்து கொள்ளலாம்.
இதனைத் தொடர்ந்து குடித்து வந்தால் ஹீமோகுளோபின் பிரச்சனை வராது.