உடலுக்கு எமனாக மாறும் ஐஸ் வாட்டர்!! தெரிந்தால் குடிக்க மாட்டீர்கள்!!

0
163
Ice water that becomes eman for the body!! If you know you won't drink!!
Ice water that becomes eman for the body!! If you know you won't drink!!

உடலுக்கு எமனாக மாறும் ஐஸ் வாட்டர்!! தெரிந்தால் குடிக்க மாட்டீர்கள்!!

வெயில் காலம் தொடங்கி விட்டாலே நாம் அனைவரும் குறைந்தபட்சம் 4 லிட்டர் மேலாவது தண்ணீர் அருந்துவது அவசியம். அந்த வகையில் நாம் அதிகப்படியானோர் வெயில் காலங்களில் ஐஸ் வாட்டரை தான் அருந்த நினைக்கிறோம். ஐஸ் வாட்டர் குடிப்பதால் உடலில் பலவித பக்க விளைவுகள் உண்டாகும். ஐஸ் வாட்டர் அருந்துவதுடன் அதற்கு மாறாக பானையில் தண்ணீர் வைத்துக் கூட குடிக்கலாம். இந்த பதிவில் ஐஸ் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்.

ஐஸ் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்:

தண்ணீரை அதிக நேரம் ஃப்ரீசரில் வைத்து குடிப்பதால் அதில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் நீங்கி நமது உடலில் உண்டாகும் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது.

அதேபோல நமது உடலானது 70% நீரால் நிரம்பியது. இதற்கு கால சூழலுக்கு ஏற்ப வெப்ப நிலையில் இருக்கும் நீரை அருந்துவது கட்டாயம். அந்த நிலையில் வெயில் காலத்தில் அதிக அளவு ஐஸ் வாட்டரை அருந்துவதால் செரிமான பிரச்சனை உண்டாகும்.
குறிப்பாக மாமிசம் போன்றவை சாப்பிட்டுவிட்டு குளிர்ந்த நீர் பருகினால் செரிமானம் ஆகுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.
முதலில் ஐஸ் வாட்டர் அருந்துவதால் பாதிக்கப்படுவது நம் பற்கள்தான். இதுவே இறுதியில் நமக்கு சொத்தை பல் உண்டாக வழி வகுத்து விடும்.
அதுமட்டுமின்றி வெப்ப காலத்தில் குளிர்ந்த நீரை அதிகளவு பரவுவதால் நமது உடலானது சாதாரண சமநிலையை மாறி காய்ச்சல் மூக்கடைப்பு போன்றவை உண்டாக நேரிடும்.
அதுமட்டுமின்றி தொண்டையில் புண் வருவதோடு உணவு சாப்பிட முடியாமலேயே போகும்.
இதனையெல்லாம் விட ஐஸ் வாட்டர் அதிக அளவு பருகுவதால் நமது தலையில் இருந்து இதயத்திற்கு செல்லும் நரம்பானது கட்டுப்படுத்தப்பட்டு இதயத்துடிப்பே குறைய ஆரம்பித்து விடுகிறது.
இது நாளடைவில் பல பக்க விளைவுகளை கொண்டு வந்து விட்டு விடும்.
அதுமட்டுமின்றி நமது மூலையில் நரம்புகள் இதனால் பாதிக்கப்படுவதால் தலைவலி அடிக்கடி உண்டாகும். மேற்கொண்டு அதிக அளவு குளிர்ந்த நீரை பருகுவதால் உடல் எடை அதிகரிக்கக்கூடும்.
இதனை எல்லாம் தவிர்க்க எளிமையான முறையில் பானையில் வைத்த தண்ணீரை பருகலாம்.