Pregnancy Belly: பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!!

Photo of author

By Rupa

Pregnancy Belly: பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!!

பெண்கள் குழந்தைகளை பெற்றெடுத்த பிறகு அவர்களின் உடல் மற்றும் மனநிலையில் அதிக அளவு மாற்றம் காணப்படுவதோடு அதனை பழைய நிலைக்கு கொண்டு வரவும் முயற்சிக்க வேண்டும்.குறிப்பாக குழந்தை பெற்ற பெண்கள் அதிக அளவு கவலைப்படுவது உடல் பருமனை குறித்து தான். கர்ப்ப காலத்தில் பொதுவாகவே பெண்கள் அதிக அளவு எடை போடுவது வழக்கமான ஒன்றுதான்.

ஆனால் அதில் இருந்து பழைய நிலைக்கு திரும்பி விட வேண்டும். ஆரம்ப கட்ட காலத்திலேயே அதற்கான முயற்சியை தொடங்கும் பொழுது உடல் எடையை எளிதாக குறைக்க முடியும். அந்த வகையில் வீட்டில் இந்த ஒரு ட்ரிங்கை குடித்து வந்தால் போதும் வயிற்றை சுற்றியுள்ள அனைத்து சதைகளும் கரைந்து விடும்.

தேவையான பொருட்கள்:
சீரகம் 1ஸ்பூன்
வெந்தயம் 1ஸ்பூன்
மிளகு 10

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு இதனை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன் வெந்தயம் மற்றும் மிளகு சேர்க்க வேண்டும்.
இது நன்றாக கொதித்து வந்ததும் இதனின் நிறம் மாறும்.
குறிப்பாக ஒரு டம்ளர் தண்ணீர் ஆனது அரை டம்ளர் வரும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.
பின்பு அடுப்பை அணைத்துவிட்டு அந்த பாத்திரத்தை மூடி வைத்துவிட வேண்டும்.
இதனை இரவு நேரத்தில் செய்து வைத்துக் கொண்டு மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரவேண்டும்.
இவ்வாறு குடித்து வந்தால் கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட வயிற்றை சுற்றியுள்ள கொழுப்புகள் அனைத்தும் அப்படியே கரைந்து விடும்.