சித்திரை திருவிழா: அழகர் ஆற்றில் இறங்க காரணம் என்ன.. இந்த நிற பட்டு அணிந்தால் என்ன பலன்!!

0
152
chitrai-festival-what-is-the-reason-for-going-down-to-alaghar-river-what-is-the-benefit-of-wearing-this-colored-silk
chitrai-festival-what-is-the-reason-for-going-down-to-alaghar-river-what-is-the-benefit-of-wearing-this-colored-silk

சித்திரை திருவிழா: அழகர் ஆற்றில் இறங்க காரணம் என்ன.. இந்த நிற பட்டு அணிந்தால் என்ன பலன்!!

மதுரை மாநகரில் சித்திரை திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். மீனாட்சி திருக்கல்யாணம் முதல் அழகர் ஆற்றில் இறங்குவது வரை ஒவ்வொன்றுக்கும் புராண கதைகள் பல உண்டு. அந்த வகையில் தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணம் முடிந்ததும், ஆண்டாள் சூடிக்கொடுத்த மலரை போட்டுக் கொண்டு அழகர் ஆற்றில் இறங்குவது ஏன் என்று பலருக்கும் தெரியாது.

அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்?

அதேபோல அவர் ஆற்றில் இறங்கும் பொழுது உடுத்தும் பட்டிற்கு பல பலன்கள் உள்ளதாகவும் கூறுகின்றனர். ஆண்டாள் பிறந்ததற்கான காரணமே பெருமாளுடன் சேர வேண்டும் என்பதுதான். அந்த வகையில் அவர் பிறந்தது முதல் வளர்ந்து வரும் வரை அவரது ஒரே வேண்டுதலாக இருப்பது திருமாலை மணமுடிப்பது என்பது தான்.

எனவே திருமாலை நினைத்து தினந்தோறும் மலர் சூடி வழிபட்டு வந்தார். இதனாலே சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே என்ற பெயர் வந்தது. அதேபோல ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியை அணிந்து கொண்டு மதுரையை நோக்கி தங்கையின் திருமணத்தை பார்க்க பெருமாள் புறப்பட்டார். மீனாட்சியின் திருக்கல்யாணம் பெருமாள் வருவதற்கு முன்பாகவே முடிந்துவிடுகிறது.அதன் கோவத்தில் தான் அழகர் ஆற்றில் இறங்குகிறார். இதுதான் மிகவும் கோலாகலமாக மதுரையில் கொண்டாடப்படுகிறது.இது முடிந்ததும் தன்னையே நித்தமும் நினைத்துக் கொண்டு, துர்வாச மகரிஷியை கண்டு கொள்ளாமல் சாபம் பெற்ற சுதபஸ் முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்க புறப்படுகிறார்.

மேற்கொண்டு வைகை கள்ளழகர் ஆற்றில் இறங்க செல்லும் பொழுது இவருக்கு அணியப்படும் பட்டானது எந்த நிறத்தில் உள்ளது அதற்கு ஏற்றவாறு அந்த ஆண்டு இருக்கும் என்பது ஒரு நம்பிக்கை. அந்த வகையில் கோவிலின் தலைமையில் உள்ளவர் அழகருக்கான பெட்டியில் கையை விட்டு ஏதோ ஒரு பட்டு எடுப்பார். எடுக்கப்படும் அந்தப் பட்டு தான் அழகருக்கு அணிவிக்கப்படும்.அந்த நிறத்திற்கு ஏற்றவாறே அந்த ஆண்டும் இருக்கும் என கூறுகின்றனர்.

அழகர் அணியும் பட்டு – என்ன நிறத்திற்கு என்ன பலன்:

சிவப்பு பட்டு எடுக்கப்பட்டால் அவ் வருடம் முழுவதும் நாட்டில் பல பேராபத்துக்கள் ஏற்படும் என்பது அர்த்தம்.
அதேபோல வெள்ளை மற்றும் ஊதா நிறப்பட்டு எடுக்கப்பட்டால் அவ்வருடம் முழுவதும் விளைச்சல் மற்றும் பாதிப்பு என்று இரண்டும் காணப்படும்.
அதேபோல மஞ்சள் பட்டு எடுக்கப்பட்டால் அவ்வருடம் முழுவதும் ஆன்மிக ரீதியாக பல நிகழ்வுகள் நடைபெறும்.
அதேபோல பச்சை பட்டு எடுக்கப்பட்டால் அந்த வருடம் முழுவதும்பொன் பொருள்  மற்றும் விளைச்சல் என அனைத்தும் அமோகமாக இருக்கும் என்பது நம்பிக்கை.மேற்கொண்டு அழகருக்கு எந்த பட்டு உடுத்தப்படுகிறதோ அதுதான் ஆண்டாளுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைப்பார்.அதனை சூடி ஆண்டாள் ஊஞ்சல் ஆட்டம் மேற்கொள்வார்.