கேரளா ஸ்டைலில் அவல் சர்பத்… சுவையாக எப்படி செய்வது?

Photo of author

By Divya

கேரளா ஸ்டைலில் அவல் சர்பத்… சுவையாக எப்படி செய்வது?

அவலில் சுவையான சர்ப்த் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. இந்த அவல் சர்ப்த் குடிப்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும். உடலை குளிர்ச்சியாக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பால் – 1 கப்
2)அவல்- 1 கப்
3)வாழைப்பழம் – 2
4)பேசில் சீட்ஸ் – 2 ஸ்பூன்
5)ஹார்லிக்ஸ் பவுடர் – 1 ஸ்பூன்
6)நன்னாரி சர்ப்த் – 6 ஸ்பூன்

அவல் சர்பத் எப்படி செய்வது?

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கப் பால் மற்றும் 1/4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1 கப் அவல் போட்டு மிதமான தீயில் சிறிது நேரம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

1/2 கப் அளவு தண்ணீரில் 2 ஸ்பூன் பேசில் சீட்ஸ் சேர்த்து சிறிது நேரம் ஊற விடவும். பிறகு 2 வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் நறுக்கிய வாழைப்பழத்தை சேர்த்து மசித்துக் கொள்ளவும். அடுத்து அதில் வறுத்த அவல், 1 ஸ்பூன் ஹார்லிக்ஸ் பவுடர், ஊறவித்துள்ள பேசில் சீட்ஸ் மற்றும் 6 ஸ்பூன் நன்னாரி சர்ப்த் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பிறகு காய்ச்சி ஆற வைத்துள்ள பாலை அதில் ஊற்றி நன்கு கலக்கவும். இன்டஜ அவல் சர்பத் குடிப்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும். பேசில் சீட்ஸ் சேர்த்துள்ளதால் அவை உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.