பிளாக் டீ கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?
பிளாக் டீ கேரளா ஸ்டைலில் செய்வது குறித்த செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த டீ உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் பானமாக இந்த பிளாக் டீ உள்ளது.
தேவையான பொருட்கள்:-
*தண்ணீர் – 1/2 கப்
*டீ தூள் – 1 தேக்கரண்டி
*சர்க்கரை – 1 1/2 தேக்கரண்டி
*இஞ்சி – 1 துண்டு
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1/2 கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் 1 தேக்கரண்டி டீ தூள் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
எந்த பிராண்ட் டீ தூளாக இருந்தாலும் சரி. அடுத்து 1 துண்டு இஞ்சி இடித்து சேர்த்து கொள்ளவும். இந்த டீ தூள் கலவையை 2 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
பின்னர் அதில் சுவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். இந்த சாயாவை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி பருகவும். இந்த முறையில் செய்தால் கேரளா சாயா அதிக சுவை மற்றும் மணமுடன் இருக்கும்