திண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி ருசியாக செய்வது எப்படி?
நம் அனைவருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்று பிரியாணி.உணவகங்களில் பல்வேறு வகையான பிரியாணி செய்யப்படுகிறது.பிரியாணி என்றால் ஆம்பூருக்கு அடுத்து இருப்பது திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி தான்.இந்த பிரியாணியை ஹோட்டல் சுவையில் வீட்டு முறையில் செய்வது மிகவும் சுலபம் தான்.இதன் சுவை நாக்கில் எச்சில் ஊறவைக்கும்.
தேவையான அளவு:-
*கோழிக்கறி – 1/2 கிலோ
*சீரக சம்பா அரிசி – 2 கப்
*கொத்தமல்லி விதை – 2 தேக்கரண்டி
*மிளகு – 1/2 தேக்கரண்டி
*சீரகம் – 1 தேக்கரண்டி
*பெருஞ்சீரகம் – 1/2 தேக்கரண்டி
*கிராம்பு – 6
*பிரியாணி இலை – 1
*ஏலக்காய் – 3
*ஜாதிபத்திரி – 1
*அண்ணாச்சி மொக்கு – 1
*கல்பாசி – 1/2 தேக்கரண்டி
*முந்திரி – 4
*சின்ன வெங்காயம் – 200 கிராம்
*பூண்டு – 12 பற்கள்
*இஞ்சி – 2 துண்டு
*கொத்துமல்லி – தேவையான அளவு
*புதினா – தேவையான அளவு
*பச்சை மிளகாய் – 4
*எண்ணெய் – 4 தேக்கரண்டி
*நெய் – 2 தேக்கரண்டி
*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
*தயிர் – 4 தேக்கரண்டி
*எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
*மராட்டி மொக்கு – 2
செய்முறை:-
1)முதலில் மிக்ஸி ஜாரிலில் கொத்தமல்லி விதை,சீரகம்,பட்டை,கிராம்பு,மிளகு,சோம்பு,பிரியாணி இலை,கல்பாசி,ஏலக்காய்,முந்திரி,அண்ணாச்சி மொக்கு,மராட்டி மொக்கு சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.அதை ஒரு தட்டிற்கு மாற்றி கொள்ளவும்.
2)பிறகு மீண்டும் மிக்ஸி ஜாரில் பூண்டு,இஞ்சி,சின்ன வெங்காயம்,பச்சை மிளகாய், கொத்தமல்லி,புதினா சேர்த்து மைய்ய அரைத்து கொள்ளவும்.
3)அடுப்பில் குக்கர் வைத்து அதில் நெய் 2 தேக்கரண்டி மற்றும் 4 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து அவை சூடேறியதும் அரைத்துள்ள வைத்துள்ள பூண்டு,இஞ்சி,சின்ன வெங்காயம்,பச்சை மிளகாய், கொத்தமல்லி,புதினா பேஸ்டை நன்கு வதக்கவும்.
4)பின்னர் பச்சை வாசனை நீங்கியதும் அதில் அரைத்து பொடி செய்து வைத்துள்ள மசாலா பவுடரை சேர்க்கவும்.
5)அதோடு மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கிளறி விடவும்.
6)பின்னர் தயிர் ஊற்றி வதக்கவும்.அவை நன்கு வதங்கி வந்ததும் அதில் 1/2 கிலோ கோழிக்கறி சேர்த்து கிளறவும்.
7)பின்னர் 1 கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.கோழிக்கறி நன்கு வெந்ததும் அதில் மீண்டும் 3 கப் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
8)பின்னர் ஊறவைத்துள்ள சீரக சம்பா அரிசியை போட்டு 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஊற்றி வேக விடவும்.பின்னர் மல்லி தழை,மற்றும் புதினா சிறிதளவு சேர்க்கவும்.
9)பின்னர் குக்கரை மூடி அடுப்பை குறைந்த தீயில் வைத்து சரியாக 10 நிமிடம் வேக விடவும்.