நாக்கில் வைத்தவுடன் கரையும் பால்கோவா – சுவையாக செய்வது எப்படி?

0
24
#image_title

நாக்கில் வைத்தவுடன் கரையும் பால்கோவா – சுவையாக செய்வது எப்படி?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இனிப்பு பண்டங்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.குறிப்பாக லட்டு,ஜிலேபி,பால்கோவா என்றால் நினைத்ததும் நாக்கில் எச்சில் ஊறி விடும்.இந்த இனிப்பு பண்டங்களை வீட்டில் செய்தோம் என்றால் கடைகளில் கிடைக்கும் அந்த டேஸ்ட் கிடைக்காது என்பது நிதர்சனம்.ஆனால் வாயில் வைத்ததும் கரையும் பால்கோவாவை வீட்டு முறையில் சுவையாக செய்வது எப்படி? என்ற செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.ஒரு முறை மட்டும் முயற்சித்து பாருங்கள்.மீண்டும் மீண்டும் செய்ய தொடங்குவீங்க.

தேவையான பொருட்கள்:-

*பால் – 1 லிட்டர்

*சர்க்கரை – 100 கிராம்

*எலுமிச்சம்  பழம்- 1/2

*ஏலக்காய் பொடி- 1/4 தேக்கரண்டி

*நெய் – 1/2 தேக்கரண்டி

செய்முறை:-

1.அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 லிட்டர் பால் சேர்த்து சூடுபடுத்தவும்.பின்னர் அடிபிடிக்காமல் இருக்க தொடர்ந்து கிண்டவும்.அடுப்பை மிதமான தீயில் வைப்பது அவசியம்.

2.அரை மணி நேரத்திற்கு பிறகு பால் சுண்டி பாதி அளவாக வந்த பின் எலுமிச்சை பழத்தில் பாதி எடுத்து அதன் சாற்றை பிழிந்து விடவும்.இப்படி செய்யும் பொழுது பால் திரிந்து வர ஆரமிக்கும்.

3.அதன் பின் 100 கிராம் சர்க்கரை சேர்த்து கிளறவும்.

4.அதன் பின் 1/4 தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிண்டவும்.

5.பின்னர் பால் சுண்டி திரண்டு வருவதை காண முடியும்.அப்பொழுது 1/2 தேக்கரண்டி
வாசனை மிகுந்த நெய் சேர்க்க வேண்டும்.

6.பிறகு பால்கோவா ஒன்றாக சேர்ந்து வரும் சமயத்தில் அடுப்பை அணைத்து விடவும்.

7.ஒரு பாத்திரம் எடுத்து அதில் நெய் தடவி கொள்ளவும்.அதில் செய்து வைத்துள்ள பால்கோவாவை ஊற்றவும்.

8.பின்னர் 2 மணி நேரம் அல்லது 3 மணி நேரம் கழித்து தயாரான பால்கோவாவை சிறுசிறு துண்டுகளாக வெட்டி சுவைக்கவும்.