சுவையான “அயிலை மீன் குழம்பு” அதுவும் கேரள முறைப்படி செய்வது எப்படி?

Photo of author

By Divya

சுவையான “அயிலை மீன் குழம்பு” அதுவும் கேரள முறைப்படி செய்வது எப்படி?

Divya

Updated on:

சுவையான “அயிலை மீன் குழம்பு” அதுவும் கேரள முறைப்படி செய்வது எப்படி?

Kerala Style Ayala Fish Curry: நாம் விரும்பி உண்ணும் மற்ற இறைச்சிகளை விட மீனில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணுவதற்கு ஏற்ற அசைவத்தில் ஒன்றாக மீன் இருக்கிறது. மீனில் அதிகளவு ஒமேகா 3 இருப்பதினால் இவை நம் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒன்று.

அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த மீனில் சுவையாக குழம்பு செய்ய வேண்டுமென்று ஆசையா? அதுவும் கேரளா ஸ்டைலில் செய்ய ஆசையா? அப்போ இந்த செய்முறையை பாலோ செய்து பாருங்கள் குழம்பின் சுவையைக் கண்டு நிச்சயம் அசந்துடுவீங்க.

தேவையான பொருட்கள்:-

*அயிலை மீன் – 1 கிலோ

*தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

*சின்ன வெங்காயம் – 8

*தக்காளி – 1

*இஞ்சி – 1 துண்டு

*பூண்டு – 7 பற்கள்

*கறிவேப்பிலை – 2 கொத்து

*பச்சை மிளகாய் – 3

*மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

*புளி – 1 எலுமிச்சம் பழ அளவு

*கொத்தமல்லி தூள் – 1 1/2 தேக்கரண்டி

*மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி

*கடுகு – 1 தேக்கரண்டி

*வெந்தயம் – 1 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

How to make Kerala Style Ayala Fish Curry

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். அவை சூடேறியதும் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பை அணைத்து இதை நன்கு ஆற விடவும்.பின்னர் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். அவை சூடேறியதும் அதில் கடுகு, வெந்தயம் சேர்த்து பொரிய விடவும்.

பின்னர் இஞ்சி, பூண்டு, 2 கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அடுத்து அதில் மஞ்சள் தூள், பச்சை மிளகாய், கொத்தமல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

இப்போது அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அடுத்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் வரை கொதிக்க விடவும்.

புளி கலவை நன்கு கொதித்து வந்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள அயிலை மீனை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் வாசனைக்காக சிறிதளவு கொத்தமல்லி தழைகளை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.