சுவையான பட்டாணி சுண்டல் செய்யும் முறை!!

Photo of author

By Divya

சுவையான பட்டாணி சுண்டல் செய்யும் முறை!!

நம் அனைவருக்கும் விருப்பமான பண்டங்களில் ஒன்றான சுவையான பட்டாணி சுண்டலை கீழே கொடுக்கப்பட்டுள்ள முறை செய்தால் மிகவும் வாசனையாகவும்,சுவையாகவும் இருக்கும்.இந்த விநாயகர் சதுர்த்திக்கு இப்படி வருத்த சுண்டல் ரெசிபியை செய்து அனைவரையும் அசத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

*பட்டாணி சுண்டல் – 1 கப்

*கறிவேப்பிலை – 1 கொத்து

*பூண்டு – 2 பற்கள்

*பச்சை மிளகாய் – 2

*தேங்காய் – 3 தேக்கரண்டி

*கொத்தமல்லி தழை – சிறிதளவு

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

*கடுகு – 1/2 தேக்கரண்டி

*தூள் உப்பு – தேவையான அளவு

*எண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:-

1.பட்டாணியை 8 மணி நேரம் தண்ணியில் ஊற விட வேண்டும்.

2.ஊறிய பின் அடுப்பு பற்ற வைத்து ஒரு குக்கர் வைத்து பட்டாணி மற்றும் உப்பு சிறிதளவு சேர்த்து குழைந்து போகாமல் வேக வைக்க வேண்டும்.பிறகு தண்ணிரை வடிகட்டி சுண்டலை ஒரு தட்டிற்கு மாற்றி கொள்ள வேண்டும்.

3.அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,பூண்டு சேர்த்து வேக வைத்த பட்டாணி போட்டு கிளற வேண்டும்.

4.மஞ்சள் தூள்,துருவிய தேங்காய்,உப்பு உள்ளிட்டவற்றை சேர்த்து கிளற வேண்டும்.இறுதியாக வாசனைக்காக கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.