கிராமத்து சுவையில் ஆட்டுக்கறி குழம்பு!! இதை செய்த கைக்கு தங்க வளையல் உறுதி!!இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

0
95
#image_title

கிராமத்து சுவையில் ஆட்டுக்கறி குழம்பு!! இதை செய்த கைக்கு தங்க வளையல் உறுதி!!இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

நம் அனைவருக்கும் பிடித்த இறைச்சிகளில் ஒன்று ஆட்டிறைச்சி.இதில் வறுவல்,குழம்பு,தொக்கு என பல வகையாக செய்து உண்பது வழக்கம்.அந்த வகையில் ஆட்டு கறி எடுத்தால் ஒரு முறை கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை படி செய்து பாருங்கள் மிகவும் சுவையாகவும் ஊரையே கூட்டும் மணத்துடனும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*ஆட்டிறைச்சி -1/2 கிலோ

*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

*இஞ்சி  – சிறு துண்டு

*பூண்டு – 8 பற்கள்

*மிளகு தூள் – 1 தேக்கரண்டி

*சீரகம் தூள் – 1/2 தேக்கரண்டி

*சோம்பு தூள் – 1 தேக்கரண்டி

*பட்டை – 2 சிறு துண்டு

*கிராம்பு – 4

*வெங்காயம்  – 2 (நறுக்கியது)

*தேங்காய் – 1/4 மூடி

*தக்காளி – 1

*மிளகாய் தூள்  – 2 தேக்கரண்டி

*எண்ணெய் – 1 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

*கருவேப்பிலை – தேவையான அளவு

*கொத்தமல்லி தழை – தேவையான அளவு

*கடலை – 1/4 கப்

செய்முறை:-

1.அடுப்பில் குக்கர் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை,இலவங்கம்,மஞ்சள் மற்றும் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள ஆட்டிறைச்சி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 முதல் 3 விசில் விடவும்.

2.அடுப்பில் ஒரு காடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.அவை சூடேறியதும் கடுகு,கருவேப்பிலை சேர்க்க வேண்டும்.

2.பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கவும்.

3.இஞ்சி,பூண்டு விழுதை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.

4.அதில் மஞ்சள்,மிளகாய் தூள்,சோம்பு தூள்,சீராக தூள் சேர்த்து வேக வைத்துள்ள கறியை சேர்த்து நன்கு கிளறவும்.

5.தேங்காய் மற்றும் கடலை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.மேலும் இதில் முந்திரி பருப்பு அல்லது கசகசா சேர்த்து அரைத்து சேர்த்தால் நன்றாக இருக்கும்.

6.கறி மற்றும் மசாலாக்கள் வெந்து வந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய்,கடலை விழுதுகளை சேர்த்து நன்கு கிளறவும்.பின்னர் தேவியான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

7.கறி வெந்து வந்ததும் சிறிதளவு கொத்தமல்லி மற்றும் கஸ்தூரி மேத்தி சேர்த்து இறக்கவும்.