சுவையான இனிப்பு அப்பம் செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்!

0
94
#image_title

சுவையான இனிப்பு அப்பம் செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்!

அனைவரும் விரும்பி சாப்பிடும் இனிப்பு உணவில் அப்பமும் ஒன்று. இந்த அப்பத்தை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். அப்பத்தை இறைவனுக்கு படைத்து பக்தர்கள் வழிபடுவார்கள்.

இந்த அப்பம் எப்படி சுவையாக செய்யலாம் என்று பார்ப்போம் –

தேவையான பொருட்கள்

மைதா மாவு – 2 கப்
ஏலக்காய் – சிறிதளவு
அரிசி மாவு – 1 கப்
வெல்லம் – 1 கப்
வாழைப்பழம் – 4
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

வெல்லத்தை ஒரு பாத்தில் சேர்த்து அதனுடன் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
வெல்லம் கொதித்து கரைந்ததும், அதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதன் பின்னர், வாழைப்பழத்தை நன்றாக மசித்து, அதில், மைதா மாவு , அரிசி மாவு, ஏலக்காய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
இதனையடுத்து, வெல்லக் கரைசைலை மாவுடன் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், மாவு தண்ணியாக இல்லாமல்,  கெட்டியாக இல்லாமல் சரியான பதத்தில் இருக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், அதில் குழிக்கரண்டியில் மாவை எடுத்து எண்ணெயில் சேர்த்து, இரு பக்கமும் சிவந்து வெந்த பிறகு எடுத்தால் சுவையான அப்பம் ரெடி.