இந்த வெயிலுக்கு அடுப்பு இல்லாமல் வெறும் 3 பொருட்களை வைத்து ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

Photo of author

By Priya

Ice Cream Recipe in Tamil: இந்த வெயிலுக்கு உடலை குளிர்ச்சியாக வைப்பது எப்படி என்று மக்கள் அவதிப்பட்டு கொண்டு இருக்கின்றனர். அந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் உள்ளது. தர்பூசணி போன்ற நீர் நிறைந்த பழங்களை அதிகமாக எடுத்து வருகின்றன. இந்த பழங்களில் அதிகமான நீர் சத்து இருப்பதால் இவ்வகை பழங்களை பயன்படுத்தி ஜூஸ் போன்றவற்றை தயாரித்து குடித்து வருகின்றனர். இந்த வெயிலுக்கு அனைவருக்கும் குளிர்ச்சியான ஐஸ்கீரிம் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும்.

ஐஸ்கீரிம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பொருள் தான் இந்த ஐஸ்கீரிம். ஆனால் ஒரு சிலர் இந்த ஐஸ்கீரிம்களை கடையில் வாங்கி சாப்பிடுவார்கள். இதனை ஆரோக்கியமாக நாம் வீட்டிலே செய்யலாம். இந்த பதிவில் அடுப்பை பற்ற வைக்காமல் மற்றும் சர்க்கரை சேர்க்காமல் சுலபமான முறையில் ஐஸ்கீரிம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் (How To Make Ice Cream in Tamil) பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • வாழைப்பழம் – 10
  • பீனட் பட்டர் – 6 டேபிள் ஸ்பூன்
  • கொக்கோ பவுடர் – 3/4 கப்
  • தேங்காய் பால் – 1 கப்

செய்முறை

  • இந்த ஐஸ்கீரிம் செய்வதற்கு முக்கியமான பொருளே வாழைப்பழம் தான். எனவே வாழைப்பழத்தை எடுத்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதனை மிக்ஸி சாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு இதனுடன் பீனட் பட்டர் சேர்த்து நன்றான கலக்கி கொள்ள வேண்டும். பிறகு கொக்கோ பவுடர், தேங்காய் பால் சேர்த்து மிக்ஸியில் மீண்டும் அரைத்து ஒரு ட்ரேவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • அதன் பிறகு அந்த ட்ரேவை பிரிட்ஜில் வைத்து நன்றாக ப்ரீஸ் செய்ய வேண்டும். 3-4 மணி நேரம் ப்ரீஸ் ஆனதும், மீண்டும் அதனை எடுத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அதனை அதே ட்ரேவில் சேர்த்து ப்ரீஸ் செய்து ஸ்கூப்பாக எடுத்தால் சுவையான ஐஸ்கீரிம் (Ice Cream Seivathu Eppadi) தயார்.

மேலும் படிக்க: மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா இனி ஈஸியா செய்யலாம் வீட்டில்..!